Form Validations, Javascript Objects & Animations

11 தகவல்களை சோதித்தல் ஒரு விண்ணப்பப் படிவத்தை நாம் பூர்த்தி செய்துவிட்டு Submit பொத்தானை சொடுக்கினால், உலாவியானது நாம் கொடுத்த விவரங்களை server-க்கு அனுப்புவதற்கு முன்னர், எல்லாம் சரியாக உள்ளதா எனச் சோதிக்கும். ஏதாவது விவரங்களை நாம் கொடுக்கத் தவறியிருந்தாலோ அல்லது தவறுதலாகக் கொடுத்திருந்தாலோ, உலாவியானது ஒரு popup மூலம் அதனை நமக்குத் தெரியப்படுத்தும். சரியான விவரங்களைக் கொடுத்து முழுவதுமாக படிவத்தைப் பூர்த்தி செய்யும்வரை, எந்த ஒரு விவரத்தையும் server-க்கு அனுப்பாது. இதுவே  Client side validations… Read More »

திறந்த மூல மென்பொருளில் முதல் அடி எடுத்து வைக்கலாம் வாங்க! 17. திட்டத்துக்கு பங்களிப்பாளர்களை ஈர்க்க 5 வழிகள்

கட்டற்ற திறந்த மூல மென்பொருள் திட்டப்பணிகள் ஒரு பிரச்சினையைத் தீர்க்க ஆரம்பிக்கப்படுகின்றன. சிலர் தாங்கள் மிகவும் எதிர்நோக்கும்  பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் என்பதற்காக அவர்களும் பங்களிக்கத் தொடங்குகிறார்கள். திட்டப் பயனர்கள் தங்கள் தேவைகளுக்கு இது பயனுள்ளதாக இருப்பதைக் கண்டுபிடிப்பதால் திட்டம் வளர்கிறது. அந்தப் பகிர்வு நோக்கமும் ஒருமித்த கவனமும் திட்டப்பணியின் சமூகத்திற்கு மற்றவர்களைக் கவர்கிறது. ஆயுட்காலம் உள்ள எதையும் போல, வளர்ச்சியே திட்டத் திறனுக்கு அடையாளமாகவும் ஆதாரமாகவும் விளங்குகிறது. எனவே எப்படி திட்டத் தலைவர்களும் மற்றும் பராமரிப்பவர்களும்… Read More »

தமிழுக்கான கட்டற்ற மென்பொருட்கள் – நிரல் திருவிழா – ஏப்ரல் 23 – சென்னை

நீங்கள் கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்கத்தில் பங்கு பெற விரும்புகிறீர்களா? தமிழுக்கு உங்கள் நிரலாக்கத் திறன் மூலம் ஏதேனும் பங்களிக்க ஆர்வமுண்டா? பிற கட்டற்ற மென்பொருள் பங்களிப்பாளர்களை சந்திக்க வேண்டுமா? இதோ ஒரு வாய்ப்பு. தமிழுக்கான கட்டற்ற மென்பொருட்கள் – நிரல் திருவிழா நாள் – ஏப்ரல் 23, 2017, ஞாயிறு நேரம் – காலை 10.00 – மாலை 5.00 இடம் – மணவை முஸ்தபா நினைவகம், அறிவியல் தமிழாய்வு அரங்கு, A E 103, 6வது… Read More »

ஐக்கிய நாடுகள் திறந்த மூலக் கருவி போட்டியில் இந்தியர் முதல் பரிசு

ஐ.நா. பொதுச்சபை தீர்மானங்களை பயனர்கள் எளிதாகத் தேடிப் பார்க்கவும் உறுப்பு நாடுகள் வாக்களிக்கும் வகைகளை ஆழமாகப் புரிந்து கொள்ளவும் கூடிய ஒரு திறந்த மூலக் கருவியை உருவாக்கும் உலகளாவிய போட்டியில் ஒரு இந்திய மென்பொருள் பொறியாளர் முதல் பரிசு வென்றுள்ளார். ஒரு தொழில்முனைவரான அப்துல்காதிர் ராஷிக் (Abdulqadir Rashik) உருவாக்கிய ‘உலகளாவிய கொள்கை (Global Policy)’ என்ற திறந்த மூலக் கருவியின்  முன்மாதிரி பொது மக்கள், ஐக்கிய நாடுகள் துறைகள் மற்றும் உறுப்பு நாடுகளுடன் பகிரப்படும். இது… Read More »

ஆண்ட்ராய்டு செயலி கற்க வேண்டுமா? அற்புதமான திறந்த மூல நிரல்களின் இணைப்புகள் இங்கே

ஆண்ட்ராய்டு செயலி எழுதுவது எப்படியென்று கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் புத்தகங்கள், வலைப்பதிவுகள் மற்றும் மன்றங்களில் கேள்வி பதில்கள் படிக்கலாம். ஆனால் ஒரு செயலியை உங்கள் திறன்பேசியில் ஓட்டிப் பார்த்து உடன் அந்த செயலியின் மூல நிரலையும் படித்துப் பார்ப்பது போன்ற கற்றல் அனுபவம் வேறெதிலும் வராது. இந்தக் கட்டுரையில் ஆண்ட்ராய்டு நிரலாளர் அரித்ரா ராய் (Aritra Roy) இருபதுக்கும் மேற்பட்ட திறந்த மூல ஆண்ட்ராய்டு செயலிகளைத் தேர்ந்தெடுத்து திறனாய்வு செய்திருக்கிறார். அவற்றின் கடினத்தையும்… Read More »

திறந்த மூல மென்பொருளில் முதல் அடி எடுத்து வைக்கலாம் வாங்க! 16. கல்வியாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 16 திறந்த மூலக் கோட்பாடுகள்

பிலடெல்பியாவின் ட்ரெக்சல் (Drexel) பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு (2014) மே 28-30 நடந்த “பேராசிரியர்கள் திறந்த மூல கோடை அனுபவம் (Professors’ Open Source Summer Experience – POSSE)” நிகழ்ச்சியில் ஹெய்டி எல்லிஸ் (Heidi Ellis) பேசினார். திறந்த மூல திட்டங்களில் மாணவர்களை உட்படுத்துவது வியத்தகு கல்வி சார் நன்மைகள் செய்யும்  என்பதை தனது சக பேராசிரியர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என வேண்டினார்.  இந்த நன்மைகளை அவர்கள் உணர்வதற்கு உதவ, திறந்த மூல சமூகங்களின்… Read More »

கூகிள் திறந்த மூலமாக வெளியிட்ட குறியாக்கியை வைத்து உங்கள் இணையதளத்தில் படங்களை சுருக்கலாம்

நீங்கள் சமீபத்தில் JPEG படங்களை மேலும் திறம்பட சுருக்குவதற்கான குறியாக்கியை (encoder) கூகிள் கட்டற்ற திறந்த மூலமாக வெளியிட்டதைப் பற்றிய செய்தியைப் படித்திருக்கக் கூடும். அதை உங்கள் இணையதளத்துக்கு பயன்படுத்தினால் சேமிப்பிடம் மற்றும் பட்டையகலத்துக்காகும் (bandwidth) செலவைக் குறைக்கலாம். பயனர்களும் பக்கங்களை விரைவில் பார்க்க இயலும். ஆனால் பயன்படுத்துவது எப்படி? பிரச்சினைகள் ஏதாவது வருமா? உமேஷ் குமார் எழுதிய இந்தக் கட்டுரையில் உபுண்டு-வில் நிறுவுவது எப்படி என்று விவரமாக செய்படிகள் தருகிறார். மூன்று பிரச்சினைகளை விவரிக்கிறார்: ஒளிபுகு… Read More »

திறந்த மூல மென்பொருளில் முதல் அடி எடுத்து வைக்கலாம் வாங்க! 15. ஊழியர்கள் திறந்த மூலத்துக்கு பங்களிக்க நிறுவனங்கள் உதவுவது எப்படி

உலகம் முழுவதும் 100,000 க்கும் அதிகமான பங்களிப்பாளர்கள் கொண்ட ட்ரூபல் (Drupal) சமூகத்தில் நான் ஒரு பகுதியாக இருக்கிறேன். திறந்த மூலத்துக்கு பங்களிக்க தங்கள் நிறுவனங்களால் ஊக்குவிக்கப்படும் வளர்ந்து வரும் ஊழியர்கள் குழுவும் இதன் மத்தியில் உள்ளது. இந்தக் காலத்தில், தன்னுடைய தற்குறிப்பில் ஓரிரண்டு (அதற்கு மேலும் கூட) திறந்த மூலம் பற்றிக் குறிப்பிடாத ஒரு அனுபவசாலியான நிரலாளரைக் காண்பது அரிதே. தலை சிறந்த நிரலாளர்களுக்கு இது முக்கியம் என்பது தெரியும். உங்களுக்கு வேலை கிடைக்கவும் மற்றும்… Read More »

திறந்த மூல மென்பொருளில் முதல் அடி எடுத்து வைக்கலாம் வாங்க! 14. உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு லினக்ஸ் கணினி ஒரு ஆண்டு

சுமார் ஒரு வருடம் முன்பு, இங்கிலாந்தின் தென்கிழக்கில் ஒரு பள்ளி, வெஸ்ட்க்லிஃப் (Westcliff) பெண்கள் உயர்நிலைப் பள்ளி, கேடிஇ (KDE) பயனர் இடைமுகம் கொண்ட லினக்ஸ்-க்கு அதன் மாணவர்கள் பயன்படுத்தும் கணினிகளை மாற்றத் தொடங்கியது. பள்ளி பிணைய மேலாளர், மால்கம் மூர் (Malcolm Moore), அந்த நேரத்தில் எங்களுடன் தொடர்பு கொண்டார். இப்போது, ஒரு ஆண்டு ஆனபின் விண்டோஸ் இல்லாத ஒரு உலகத்தில் அவருக்கும் மாணவர்களுக்கும் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்த, அவர் மீண்டும்… Read More »

Dialog Boxes and Exception Handling

9 Dialog Boxes Javascript-ல் 3 முக்கியமான பெட்டிகள் உள்ளன. அவற்றைக் கீழ்க்காணும் எடுத்துக்காட்டில் காணலாம். “Alert box” எனும் பெயர் கொண்ட பொத்தானின் மீது சொடுக்கும்போது “This is a warning message!” எனும் செய்தி வெளிப்படும் வகையில் ஒரு பெட்டி உருவாக்கப்பட்டுள்ளது. இது பயனர்களை எச்சரிக்க உதவும் alert() பெட்டி ஆகும். “Confirm box” எனும் பெயர் கொண்ட பொத்தானின் மீது சொடுக்கும்போது “Do you want to continue?” என்ற ஒரு கேள்வியைக்… Read More »