ஆண்ட்ராய்டு பயன்பாடுகளை எளிதில் உருவாக்க உதவும் AppInventor2

ஆண்ட்ராய்டு பயன்பாடுகளை எளிதில் உருவாக்க உதவும் ஒரு கருவியே  MIT App Inventor ஆகும் . நுகர்வோரே தங்களுடைய  பயன்பாட்டிற்குத் தேவையான மென்பொருட்களை தாங்களே அதிலும் இளைஞர்களே உருவாக்கி கொள்வதற்கான தொழில நுட்பத்தை வழங்குவதே இந்த  MIT App Inventor இனுடைய அடிப்படை நோக்கமாகும். அது மட்டுமல்லாது செல்லிடத்து பேசிகளில் கணினி கல்வியை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதும் கணினி அறிவியலை மேம்படுத்துதலும்  இதனுடைய அடுத்த திட்டமாகும். இதனை Scheller Teacher Education Program, MIT Media Lab,MIT… Read More »

எளிய தமிழில் CSS – 4 – Tables

Tables CSS-ல் tables-ஐ அழகுபடுத்த அவற்றின் ஒவ்வொரு அங்கங்களும் தனித்தனியாகக் குறிப்பிடப்படுகின்றன. பின்வரும் உதாரணத்தில் table எவ்வாறு இருக்க வேண்டும், table heading எவ்வாறு இருக்க வேண்டும், table data எவ்வாறு இருக்க வேண்டும் என்று தனித்தனியே குறிப்பிடப்பட்டுள்ளது. [code] <html> <head> <style> table {width:”60%”; height: “40%”; border: 3px solid red;} th {border: 2px solid green;} td {border: 1px solid orange;} </style> </head> <body> <table> <tr>… Read More »

இருபரிமான வடிவமைப்பிற்கு பயன்படும் லிபர் கேட் LibreCAD

லிபர் கேட்(LibreCAD) என்பது ஒரு கட்டற்ற ,கட்டணமற்ற ,Microsoft Windows, Mac OS X, GNU/Linux ஆகிய அனைத்து இயக்க முறைமைகளிலும் செயல்படுமாறு கட்டமைக்கப்பட்டதொரு இருபரிமான (2D) கணினி வழி வடிவமைப்பு (CAD) பயன்பாடாகும். இந்த லிபர் கேட்(LibreCAD) ஆனது புதியவர்கள் கூட ஒரு  இருபரிமான (2D) கணினிவழி வடிவமைப்பை (CAD)  பற்றி  எளிதாக  முழுமையாக புரிந்துகொள்ள உதவும் ஒரு பயன்பாடாகும். இதனை பயன்படுத்துவதற்காக  அனுமதிக் கட்டணமோ ஆண்டுக் கட்டணமோ செலுத்திடத்தவையில்லை. அவ்வாறே பதிப்புரிமை அனுமதியோ அல்லது… Read More »

எளிய தமிழில் CSS – 3 – links, lists

Links ஒரு link-ஐ அழகுபடுத்த color, font-family, font size என்று மேற்கூறிய அனைத்து விஷயங்களையும் பயன்படுத்தலாம். இவை அனைத்தும் கீழ்வரும் நான்கு விதங்களுக்குள் வரையறுக்கப்படும். a:link = ஒரு link எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை வரையறுக்கிறது. a:hover = Mouse cursor-ஐ அந்த link-ன் அருகே கொண்டு செல்லும்போது அந்த link எவ்வாறு காட்சியளிக்க வேண்டும் என்பது இங்கு வரையறுக்கப்படுகிறது. a:active = அந்த link-ன் மீது சொடுக்கும்போது அது எவ்வாறு காட்சியளிக்க வேண்டும்… Read More »

பொறியியல் வடிவமைப்புகளுக்குப் பயன்படும் OPENMODELICA

பொறியியலில் கல்வி கற்பவர்கள் அனைவருக்கும் உருப்படியாக்கம் (modelling) என்பது இதயம் போன்றதாகும். ஏனெனில் மாதிரி வடிவமைப்பில் நாம் விரும்பியவாறு செய்து போலியான நிகழ்வை(simulation) செயல்படுத்தி பார்த்தால் என்னவாகும்? அதனை மாற்றி வேறுமாதிரியாக வடிவமைத்து போலியான நிகழ்வை(simulation) செய்துபார்த்தால் என்ன மாறுதல் ஆகும்? என பல்வேறு கோணங்களில் பல்வேறு அமைவுகளில் சிந்தித்து செயல்படுத்தி சரியானதை அடையும்வரை செயற்படுத்திப் பார்ப்பதற்கு இந்த உருப்படியாக்கம்(modelling)  அத்தியாவசியத்தேவையாகும். பொதுவாக இயந்திர பொறியாளர்கள் CAD என்பதை பயன்படுத்திகொள்வார்கள். மின்பொறியாளர்கள் CircuitCharts என்பதை பயன்படுத்திகொள்வார்கள். கணினி… Read More »

எளிய தமிழில் CSS – 2 – Text, Font

Text color என்பது எழுத்துக்களின் நிறத்தைக் குறிக்க உதவும். பின்வரும் 3 விதங்களில் இதன் மதிப்பைக் கொடுக்கலாம் : HEX மதிப்பாகக் கொடுக்கலாம் (e.g: “#ff0000”) , ஒரு RGB மதிப்பாகக் கொடுக்கலாம் (e.g: “rgb(255,0,0)”) அல்லது ஒரு நிறத்தின் பெயரையே கூட கொடுக்கலாம். (e.g: “red”). text-align என்பது எழுத்துக்களை ஒரே பக்கமாக ஒதுங்குபடுத்த உதவுகிறது. இதன் மதிப்பு Left என்று இருந்தால் இடப்பக்கத்திலும், Right என்று இருந்தால் வலப்பக்கத்திலும், center என்று இருக்கும்போது மையத்திலும்… Read More »

லினக்ஸ் இயக்கமுறையில் எளிய திரைக்காட்சி பதிவுசெய்தல் (Simple Screen Recorder(SSR)) எனும் பயன்பாடு

சுயமாக தொழில்நுட்பங்களை கற்றறிந்து கொள்வதற்காக திரைக்காட்சியை பதிவுசெய்தல் (ScreenCast) என்பது மிகமுக்கியமான செயலாகும். அதாவது திரையில் தோன்றிடும் காட்சியை படமாக்கப்பட்டு பின்னர் காணொளி காட்சியாக காண்பிப்பதற்காக கோப்பு உருமாற்றம் செய்யப்படவேண்டும். பெரும்பாலும் இவ்வாறான செயலை செய்வதற்காக தனியுடமை மென்பொருட்களே ஏராளமான வகையில் உள்ளன. நல்ல தரமான காணொளி காட்சிகளாக தரும் கோப்புகளை உருவாக்குவதில் கட்டற்ற மென்பொருட்கள் அரிதாக உள்ளன. அதனை தீர்வு செய்வதற்காகவே இந்த எளிய திரைக்காட்சி பதிவுசெய்தல் (Simple Screen Recorder(SSR)) எனும் கட்டற்ற பயன்பாடு… Read More »

எளிய தமிழில் CSS – 1 – அறிமுகம்

Cascading Style Sheets என்பதே CSS என்றழைக்கப்படுகிறது. இது HTML மூலம் உருவாக்கப்படும் வலைத்தளப் பக்கங்களை இன்னும் அழகுபடுத்த உதவும் ஒரு சிறப்பு வகை நிரல் ஆகும். அதாவது HTML-ல் font color, size, bgcolor என்பது போன்ற பல்வேறு வகையான attributes-ஐப் பயன்படுத்தி நாம் விரும்பும் நிறம் வடிவம், அளவு போன்ற சில குறிப்பிட்ட விவரங்களைக் கொடுப்போம். மேலும் ஒவ்வொரு பக்கத்திற்கும் இத்தகைய விவரங்களை நாம் இணைக்க வேண்டியிருக்கும். அதனால் இவ்வாறு அமைக்கும்போது HTML code படிப்பதற்கும் பார்ப்பதற்கும்… Read More »

மென்பொருள் உருவாக்கும் விந்தையுலகம் 12: நேருக்கு நேர் உரையாடல்தான் சிறந்தது என்கிறார்கள், ஆனால் நாம் இருப்பதோ கடல்கடந்து!

Agile/Scrum பற்றி தொடர் கட்டுரை – 12 “ஒரு மென்பொருள் உருவாக்கும் அணி கருத்துப் பரிமாற மிகவும் திறமையான மற்றும் பயனுள்ள முறை நேருக்கு நேர் உரையாடல்தான்.” தகவெளிமை கொள்கை விளக்க அறிக்கையுடன் (Agile Manifesto) வெளியிடப்பட்ட மென்பொருளுக்கான கோட்பாடுகளில் இது ஒன்று. ஆனால் எப்பொழுதும் குழு உறுப்பினர்கள் யாவரும் ஒரே இடத்தில் இருப்பது இல்லை. என்னுடைய அணிகளில் இரண்டில் யாவரும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்தாலும் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாரத்தில் பல நாட்கள் தொலைவேலை… Read More »

எளிய தமிழில் WordPress- 9

ஊடக பயன்பாடுகள்: Media library எனும் ஊடக தொகுப்பில் நாம் பதிவிற்காக பயன்படுத்த வேண்டிய ஊடகங்கள் சேகரிக்கப்படும் அவை யாவும் நம்மால் உள்ளிட்டு வைக்கப்பட்டவையே ஆகும். இங்கு ஊடகம் என குறிக்கப்பெறுவது படங்கள் (Images), ஆவணங்கள் (documents/PDF), முதலானவை; வீடியோ காட்சிகளையும் இணைக்கலாம். அவை மேம்படுத்தப்பட்ட premium கணக்குகளுக்கு மட்டுமே. (வீடியோக்களை embed செய்வது குறித்து முன்பே விளக்கப்பட்டுள்ளது) நமக்கு இவ்வாறாக ஊடகங்களை சேர்த்து வைக்க 3 ஜிபி (GB) இடம் தரப்படும். ஒரே முறையில் நம்மால்… Read More »