ஈமேக்ஸ் உரைதிருத்தி – ஓர் அறிமுகம்

            ஈமேக்ஸ் (emacs) – இதை என்னவென்று அறிமுகம் செய்வது? வெறும் உரைதிருத்தி (text editor) என்று கூறிவிட முடியாது; அதையும் தாண்டிப் பலவற்றைச் செய்யவல்லது. கிட்டத்தட்ட ஓர் இயங்குதளத்திற்கு இணையான மென்பொருள். ஆம், எழுத்துக் கோப்புகள் (text documents) தொடங்கி, JPEG, PNG போன்ற படக்கோப்புகள், PDF ஆவணங்கள் எனப் பல வகையான கோப்புகளைக் கையாள வல்லது.   கோப்புகளைப் பார்ப்பதும் திருத்துவதும் வெறும் சிறு பகுதிதான். இதைக்கொண்டு மின்னஞ்சல் அனுப்பலாம், கிட் (git) போன்ற… Read More »

நீங்கள் ஏன் விண்டோஸ் ஐ விட்டு மாற வேண்டும்?

நாம் அனைவரும் நல்லவர்களா? நீங்கள் ஒருவரது பணத்தை, செல்வத்தை அவருக்கு தெரியாமல் செலவழித்தால், பயன்படுத்தினால் நீங்கள் நல்லவரா? இல்லை. நிச்சயமாக இல்லை. நீங்கள் உங்களது விண்டோஸ் 7  ஐ சுமார் ரூபாய் 5500 கொடுத்து வாங்காமல் வேறு எந்த வழியில் பயன்படுத்தி கொண்டு இருந்தாலும், நீங்கள் நல்லவர் இல்லை. ஏனெனில் நீங்கள் மற்றவரது பொருளை அவர்களுக்கு தெரியாமல், தவறான வழியில் பயன்படுத்தி வருகின்றீர்கள்.5000 ருபாய் கொடுத்து ஒரு மென்பொருளை வாங்க நான் என்ன டாட்டா வா பிர்லா… Read More »

find கட்டளை

GNU find ஒரு திறம் வாய்ந்த கட்டளை–வரி பயனமைப்பு (command-line utility) ஆகும். இது கோப்புகளையும், அடவைகளையும் (files and folders) படிநிலை மரவமைப்பாக (hierarchical tree structure) தேட பயன்படுகிறது. KDE மற்றும் GNOMEகளில் உள்ள வரைகலை தேடல்களுக்கு இதுவே பின்னிலை (backend) ஆகும். எனினும் find தொடக்கத்தில் பயன்படுத்த கடினமாக இருக்கும். இக்கட்டுரையில் நாம் எளியதிலிருந்து கடினமான பயிற்சிக்கு செல்லலாம். நான் find 4.4.2 பதிபபை நிறுவியுள்ளேன். ஏனனில் இது உபுண்டு 12.04 Precise… Read More »

டெபியன் நிர்வாகிக்கான கையேடு

    புத்தகத்தைப் பற்றி:   இந்தப் புத்தகத்தை எழுதிய ராபேல் ஹெர்ஜாக்(Raphaël Hertzog), ரோலண்ட் மாஸ்(Roland Mas) இருவரும் டெபியன் உருவாக்குபவர்கள். பிரெஞ்சு மொழியில் மிக அதிகமாக விற்பனையான, இவர்களது ‘Cahier de l’admin Debian'(Eyrolles வெளியீடு) என்ற புத்தகத்தின் மொழிபெயர்ப்பே, இந்த ‘டெபியன் நிர்வாகிக்கான கையேடு’ ஆகும். டெபியனை அடிப்படையாகக் கொண்ட வழங்கல்களை உபயோகிக்கும் அனைவருக்கும் இது ஒரு வரப்பிரசாதமாகும்.  யாவர்க்கும் எளிதில் கிடைக்கக்கூடிய இப்புத்தகம், திறமையான, தற்சார்புடைய டெபியன் குனு/லினக்ஸ் நிர்வாகியாக விரும்பும்… Read More »

சுதந்திர மென்பொருள் மற்றும் திறந்த மூல மென்பொருள் – வித்தியாசம்

“கட்டற்ற மென்பொருள் கருத்தியல் பற்றிய ஒரு கலந்துரையாடல்” என்ற தலைப்பில் “ப்ரீ சாப்ட்வேர் பௌண்டேஷன் தமிழ்நாடு”வின் மின்னாடல் குழுவில் இருந்து ஒரு இழையின் மொழி பெயர்ப்பு. அன்புள்ள நண்பர்களே, உங்களுக்கு முன்பே, கட்டற்ற/சுதந்திர மென்பொருள் மற்றும் திறந்த மூல மென்பொருள் பற்றிய வித்தியாசம் தெரிந்திருக்கலாம், இதை பற்றி நான் எளிமையாக ஏன் இந்த வித்தியாசம் மிக முக்கியம் என்று என்னுடைய கருத்துகளை பகிர்ந்துகொள்கிறேன். அடிப்படையில் கட்டற்ற/சுதந்திர மென்பொருள் [ Free Software ] தன் வழியில் வரும்… Read More »

டெர்மினலில் கட்டளைகளை வேகமாக இயக்க மறுபெயர்களை(alias) உருவாக்குதல்

  நாம் இந்த பகுதியில் எவ்வாறு மறுபெயர்கள் அதாவது aliasயினை உபுண்டுவில் உருவாக்குவது என்று காணலாம். மறுபெயர், நமக்கு விருப்பமான கட்டளைகளுக்கு  சிறிய வார்த்தையினை சூட்டி அந்த கட்டளையினை விரைவாக இயக்க உதவுகிறது. இது நீளமான கட்டளைகளையும், அல்லது நாம் அடிக்கடி பயன்படுத்தும் கட்டளைகளையும் வேகமாக இயக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உதாரணத்திற்கு உபுண்டுவின் repositoryஐ updateசெய்வதற்கு (sudo apt-get update), அதேபோல upgrade செய்வதற்கு (sudo apt-get upgrade). இப்போது நமது home அடைவினுள் .bash_aliases… Read More »

ஒரு கட்டற்ற மென்பொருள் மேதையின் மறைவு…

    கென்னத் கான்ஸல்வேஸ் – கட்டற்ற மென்பொருள் மடலாடற்குழுக்களில் சிறிதளவேனும் பங்குகொண்டோருக்கு இந்தப் பெயர் நிச்சயம் தெரிந்திருக்கும். சென்னை லினக்ஸ் பயனர் குழு உள்பட பல குழுக்களுக்கு இவர் ஆற்றிய பங்கு மகத்தானது. இத்தகைய மாமனிதர் இப்பொழுது நம்மிடையே இல்லை. அவரது மறைவு கட்டற்ற மென்ம உலகில் பலருக்கு ஈடு செய்யமுடியாப் பேரிழப்பு. கணியம் குழு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது மகத்தான பங்களிப்புகளையும் இங்கே நினைவுகூர்கிறது. கென்னத் கான்ஸல்வேஸ் உதகையில் பிறந்த ஒரு… Read More »

இந்தியாவில் உபுண்டு பயணர் எண்ணிக்கை 160% உயர்வு

இந்தியாவில் உபுண்டு பயணர்களின் வளர்ச்சிவிகிதம் கடந்த ஆண்டு 160% உயர்ந்திருப்பதாக கனோனிக்கல் முதன்மை செயல் அதிகாரி ஜான் சில்பர் கூறுகிறார். Securiy updates, Downloads, Preloade Devices Sold இதுபோன்ற தகவல்களை கனோனிகல் நிறுவனம் அந்தரங்கமாகவே வைத்திருக்கிறது. இந்த தகவல்களின் புள்ளியியல் அடிப்படையில் இதை ஜான் சில்பர் கூறுகிறார். இந்தியாவில் மிகப்பெரிய வாய்ப்பு “உபுண்டுவை பயன்படுத்துவதில் இந்தியாவில் நாங்கள் குறிப்பிடத்தக்க வளச்சியினை காண்கிறோம். அது கடந்த ஆண்டில் 160% ஆக வளர்ச்சியடைந்திருக்கிறது.” என சில்பர் மேலும் கூறுகிறார்.… Read More »

‘நான் உபுண்டு பயன்படுத்துகிறேன்’- Stephen Fry

      ஸ்டீபன் ப்ரை – Stephan Fry   ஸ்டீபன் ப்ரை அவர்கள் 1954 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 24-ஆம் தேதி லண்டனில் பிறந்தார். நடிகர், திரைப்பட இயக்குநர், எழுத்தாளர், பத்திரிக்கையாளர், புத்தக எழுத்தாளர், நகைச்சுவை நடிகர், பாடலாசிரியர் என பன்முகத் தன்மைக் கொண்டவர். மேலும் தெரிந்து கொள்ள en.wikipedia.org/wiki/Stephen_Fry பக்கம் போய்ப் பாருங்கள். இவர் ஒரு உபுண்டு பயனாளர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.   இவ்வளவு சிறப்புமிக்க ஒரு நபர் உபுண்டு… Read More »

பைதான் – அடிப்படை கருத்துகள் -03

இரண்டு வார்த்தைகளை ஒன்றாக இணைக்க + என்ற operator பயன்படுகிறது. ஒரே சொல்லை பலமுறை repeat செய்ய * பயன்படுகிறது.   >>> word = ‘Help’ + ‘A’ >>> word ‘HelpA’ >>> ‘<‘ + word*5 + ‘>’ ‘<HelpAHelpAHelpAHelpAHelpA>’   இரண்டு சொற்களை அருகில் வைத்தாலே போதும். அவை ஒன்றாக இணைத்துவிடும். மேற்கண்ட உதாரணத்தை word – ‘Help’ ‘A’ என்றே சொல்லி விடலாம். ஆனால் இது வெறும் strings-க்கு மட்டுமே… Read More »