திறமூல மென்பொருட்களுக்கிடையிலானப் போட்டிகள்

பொதுவாக மனிதர்களுக்கு தத்தமது தனித்துவத்தின்மீது வலுவான உணர்வு உள்ளது. இது அற்பமான செயல்களில் கூட பலவிதமான கண்ணோட்டங்களுக்கு வழிவகுக்கிறது. இந்த வகையில் கணினி உலகம்கூட சிறப்பாக அமையவில்லை. ஒரு எளிய உதாரணத்தின் மூலம் இந்தசெய்தியை தெளிவுபடுத்தமுடியும். C, C++ அல்லது Java ஆகிய கணினிமொழிகளில் நிரலை எழுதும் போது, அடைப்புக்குறியை எங்கு பயன்படுத்திடுவோம்? பல தொழில்முறை நிரலாளர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிமுறைவரிகளில் உள்ள இரண்டு பாணிகளில் ஒன்றைப் பின்பற்றுகின்றார்கள்: fun( ) { //Body of the… Read More »

குறிமுறைவரிகளை எழுதுகின்ற தொழில்நுட்பம் தெரியாதவர்களும் நிரலாக்கங்களை (Programming Without Coding Technology(PWCT)) உருவாக்கஉதவுகின்ற கட்டற்ற பயன்பாடு

PWCT என்பது புதியநிரலாளர்களுக்காகவும், அனுபவமிக்க நிரலாளர்களுக்காகவும் வடிவமைக்கப்பட்ட ஒரு பொது நோக்கத்திற்கான காட்சி வாயிலான நிரலாக்க மொழியாகும் PWCT என சுருக்கமாக அழைக்கப்பெறுகின்ற குறிமுறைவரிகளை எழுதுகின்ற தொழில்நுட்பம் தெரியாதவர்களும் நிரலாக்கங்களை (Programming Without Coding Technology) உருவாக்கஉதவுகின்ற இது 1 ,2 ,3 என்றவாறான படிமுறைகளில் நம்முடைய பயன்பாட்டினை உருவாக்கிடுவதற்கான ஒரு வழிகாட்டி அன்று. . புதிய நிரலாளர் ஒருவர் தரவு கட்டமைப்புகள், கட்டுப்பாட்டு கட்டமைப்புகள், நிரலாக்க முன்னுதாரணங்கள் போன்ற நிரலாக்க கருத்துக்களை எளிதாகஅறிந்து கொள்வதற்காக PWCT… Read More »

எளிய தமிழில் 3D Printing 10. பொருள்சேர் உற்பத்தியா, பொருள்நீக்கு உற்பத்தியா?

சிக்கலான உள் வடிவியல் கொண்ட பாகங்களுக்கு முப்பரிமாண அச்சிடல் இன்றியமையாதது பொருளை அகற்றுவதற்குப் பதிலாக அடுக்குகளை உருவாக்குவதன் மூலம் பொருள்சேர் உற்பத்தி வேலை செய்கிறது. ஆகவே இத்தொழில்நுட்பம் சுழல் காற்றுக்குழல்கள் (spiral vents) மற்றும் உள்ளுக்குள் உள்ளான கூடுகள் (nested hollow cores) போன்ற சிக்கலான உள் வடிவியல் கொண்ட தயாரிப்புகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.  மேலும் பொருள் நீக்கு உற்பத்தி செயல்முறையில் சில சிக்கலான வடிவமைப்புகளுக்கு இரண்டு, மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட சிறிய பாகங்களை… Read More »

லினக்ஸில் பொதுவான யூனிக்ஸ் அச்சுப்பொறிஅமைவின் (CUPS) மூலம் எங்கிருந்தும் அச்சிடுக

நம்முடைய வீட்டின் அலுவலக அறையில் அச்சுப்பொறி உள்ளது, வீட்டின் மற்றொரு அறையில் மடிக்கணினியில் பணி செய்துவருகிறோம். நம்முடைய வீட்டு வலைபின்னலில் பகிரப்படும் வகையில் அச்சுப்பொறியை அமைத்து உள்ளோம், அதனால் தேவையானபோது நம்முடைய வீட்டில் எங்கிருந்தும் அச்சிட முடியும். இந்த அமைப்பிற்கு சிறப்பு உபகரணங்கள் எதுவும் தேவையில்லை. இது வழக்கமான லினக்ஸ் கணினி ,பொதுவான யூனிக்ஸ் அச்சுப்பொறி அமைவின் (Common Unix Printing System (CUPS)) மூலம் செயற்படுத்தப்படுகின்றது. லினக்ஸில் CUPS ஐ நிறுவுதல் யுனிக்ஸ் அச்சிடுதலுக்கான திறமூல… Read More »

எளிய தமிழில் 3D Printing 9. படிவுத் துகளை உருக்கி இணைத்தல்

சிட்டங்கட்டல் (Sintering) முறையில் துகள்களை முழுவதும் திரவமாக உருக்காமல் நமக்குத் தேவையான வடிவத்தை உருவாக்கலாம் என்று பார்த்தோம். உலோகம் போன்ற துகள்களை படிவம் படிவமாக உருக்கி இணைப்பதன் (Powder bed fusion) மூலமும் உருக்கிப் பீச்சுதல் (Material Jetting) மூலமும் நமக்குத் தேவையான வடிவங்களை உருவாக்கலாம். உலோகங்களை இளக்குவதும், கையாளுவதும் மிகக் கடினமான வேலை வெப்பத்தால் இளகும் நெகிழிகள் (thermoplastics) பெரும்பாலும் 110 முதல் 200 பாகை செல்சியசில் இளகத் தொடங்கும். சுமார் 150 முதல் 300… Read More »

மொசில்லா பொதுக்குரல் – அரைமணி நேர அறிமுகக் கூட்டம்

மொசில்லாவின் திறந்த மூல குரல்தரவுதள முன்னெடுப்பான Common Voice (voice.mozilla.org/ta) இப்போது தமிழில் தொடங்கப்பட்டுள்ளது. இது குரல் கண்டறிதல் தொழில்நுட்பங்களுக்குப் பயிற்சி அளிப்பதற்குத் தேவையான பெருமளவு குரல்மாதிரிகளைக் பொதுக்கள உரிமையில் (CC-0) வெளியிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. Common Voice தளத்திற்குச் சென்று சொற்றொடர்களைப் பேசி பதிவுசெய்வதின் மூலமும் பதிவு செய்யப்பட்டவற்றைச் சரிபார்ப்பதின் மூலமும் நீங்கள் பங்களிக்கலாம். இதைப் பற்றிய அரை மணி நேர அறிமுகக் கூட்டம் இணையவழி நடக்கவிருக்கிறது. நாள்: 24.10.2021 ஞாயிறு – காலை 10… Read More »

லினக்ஸின் உருவாக்கமையத்தின் பொதுவாக அறிந்தகொள்ளாத முப்பது செய்திகள்

இந்த ஆண்டு லினக்ஸின் உருவாக்கமையத்திற்கு 30 வயதை எட்டுகிறது. இது மூன்று தசாப்தங்களின் முன்னோடியான ஒரு திறமூல மென்பொருளாகும், பயனாளர்கள் கட்டணமற்ற மென்பொருளை இயக்கவும், இயங்குகின்ற பயன்பாடுகளிலிருந்து கற்றுக்கொள்ளவும், கற்றுக்கொண்டதை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் உதவுகிறது. லினக்ஸின் உருவாக்கமையம் இல்லாமல், இன்று நாம் அனுபவிக்கின்ற திறமூல கட்டணமற்ற மென்பொருட்களின் ஆடம்பரங்கள் ஆகிய எவைகளும் நாம் அடைந்திருக்முடியாது . ஆப்பிள் , மைக்ரோசாப்ட் , கூகுள் ஆகியவை லினக்ஸ் வினையூக்கியாக இல்லாமல் திறமூலத்திற்கு அடியெடுத்துவைத்திருப்பது என்பது மிகவும் சாத்தியமற்றதாகும்.… Read More »

எளிய தமிழில் 3D Printing 8. சீரொளி சிட்டங்கட்டல் (laser sintering)

சிட்டங்கட்டல் என்பது துகள்களை முழுவதும் திரவமாக உருக்காமல் வெப்பம் மற்றும் அழுத்தம் கொடுத்து இறுக்குதல் அல்லது கெட்டித்தல் மூலம் ஒரு திடமான பொருளை உருவாக்கும் செயல்முறை. இது துகள்களை ஒன்றாக இணைத்து ஒரு திடமான பாகத்தை உருவாக்குகிறது. சீரொளி தேர்வு சிட்டங்கட்டல் (selective laser sintering – SLS) மற்றும் நேரடி உலோக சீரொளி சிட்டங்கட்டல் (Direct metal laser sintering – DMLS) இதில் அடங்கும். அடிப்படையில் இவை ஒரே மாதிரியானவை. நெகிழி, கண்ணாடி, பீங்கான்… Read More »

ஒவ்வொரு பயனாளரும் தெரிந்துகொள்ளவேண்டிய பதினெட்டு அத்தியாவசிய லினக்ஸ் கட்டளைகள்

லினக்ஸ் இயக்கமுறைமையை பயன்படுத்திடுகின்ற புதியவர்கள் முதல் அனுபவமிக்கவர்கள்வரை.உள்ள அனைத்து பயனாளர்களுடைய பணியையும் எளிதாக்கு கின்ற 18 லினக்ஸ் கட்டளைகள் பின்வருமாறு. இருண்டதாக காட்சியளிக்கின்ற சாளரத்தில் கட்டளைகளைத் தட்டச்சு செய்வது சிலருக்கு பழமையானதாகத் தோன்றலாம், ஆனால் பல்வேறு கணினி பயனர்களுக்கும், இது ஒரு கணினி செய்யக்கூடிய எந்தப் பணியையும் நிறைவேற்றுவதற்கான மிகவும் திறமை யான, எளிதாக அணுகக்கூடிய, தெளிவான வழிமுறையாகும்.தற்போதைய நம்முடைய வாழ்க்கை சூழலில், நாம் மேக், விண்டோ போன்ற கட்டுண்ட தளங்களிலும் செயல்படுகின்ற திறமூல கட்டளைகள் ஏராளமாக… Read More »

எளிய தமிழில் 3D Printing 7. ஒளித் திண்மமாக்கல் (photo-solidification)

பொருள்சேர் உற்பத்திக்கு பலவிதமான செயல்முறைகள் உள்ளன. பாகங்களை உருவாக்க அடுக்குகள் கட்டும் விதத்திலும், பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களிலும்தான் இவை முக்கியமாக வேறுபடுகின்றன. ஒரு இயந்திரத்தை நாம் தேர்ந்தெடுப்பதில் முக்கிய காரணங்கள் அதன் வேகம், அதன் விலை, பாகத்தை  அச்சிட ஆகும் செலவு, எம்மாதிரிப் பொருட்களில் அச்சிட இயலும் ஆகியவையே. இழையை உருக்கிப் புனைதல் தவிர மற்ற சில செயல்முறைகளைப் பற்றிப் பார்ப்போம். ஒளி பட்டால் திண்மமாகும் நெகிழி (photopolymers) திரவங்கள் ஒளி பட்டால் திண்மமாகும் நெகிழி (photopolymers) திரவங்கள்… Read More »