Tag Archives: Digital Archive

கட்டற்ற முறையில் டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் கற்க சிறந்த இணையதளம்

நாம் பல்வேறு விதமான எளிய எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளை தொடராக பார்த்திருக்கிறோம். மேலும் லாஜிக் கதவுகள் தொடர்பான அடிப்படை தகவல்களையும் சில கட்டுரைகளில் பார்த்திருக்கிறோம். ஆனால், டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் என்பது ஒரு கடல் போன்றது. தற்காலத்தில் இயங்கும் அனைத்து விதமான தொழில்நுட்பங்களுக்கும் ஆற்றல் மையமாக விளங்குவது டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் தான். இது தொடர்பாக கற்றுக் கொள்வதற்கு பல்வேறு விதமான இணையதளங்கள் காணப்பட்டாலும் கூட, நுணுக்கமாக தகவல்களை பெறுவதற்கு பல்வேறு இணையதளங்களை தேடி தேடி அலைய வேண்டிய தேவை இருக்கும்.… Read More »

எண்ணிம நூலகவியல் 5 – எண்ணிமப் பொருள் (Digital Object)

பெளதீக நூலகங்களிலும் ஆவணகங்களிலும் நாம் நூற்கள், இதழ்கள், ஆவணங்கள், இறுவட்டுக்கள் என்று பெளதீக பொருட்களையே முதன்மையாகப் பயன்படுத்துகிறோம். அருங்காட்சியங்களில் கலைப்பொருட்களை (artifacts) சென்று பார்க்க முடியும். எண்ணிம நூலகங்கள், ஆவணகங்கள், அருங்காட்சியகங்களில் நாம் எண்ணமப் பொருட்களை (digital objects) உருவாக்கி, பாதுகாத்து, பயன்படுத்துகிறோம்.  இங்கு எண்ணிமப் பொருள் என்பது ஒரு முக்கிய கருத்துருவாக எழுகிறது. எண்ணிமப் பொருட்கள் இரு வகைகளில் உருவாக்கப்படுகின்றன.  ஒன்று, இயல்பாகவே எண்ணிம வடிவத்தில் உருவாக்கப்படும் ஆவணங்கள் மற்றும் மெய்நிகர் பொருட்கள் ஆகும். எடுத்துக்காட்டாக… Read More »

எண்ணிம நூலகவியல் 1 – நிலைத்த அடையாளங்காட்டி (Persistent Identifier)

ஆய்வுச் செயற்பாட்டின் அடிப்படை தாம் பயன்படுத்தும் உசாத்துணைகளை (references) மேற்கோள் (cite) காட்டுவது ஆகும்.  இன்று பெரும்பாலும் இணைய வளங்களைப் பயன்படுத்தியே ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.  இணைய வளங்களின் அடையாளமாக அவற்றின் உரலிகள் (urls)  அல்லது அவற்றின் இணைய இணைப்புக்களே (links) பெரும்பாலும் அமைகின்றன.  ஆனால் பெரும்பாலான உரலிகள் நீண்ட காலம் பேணப்படும் வண்ணம் அமைக்கப்படுவதில்லை.  அதனால் ஒரு நூலிலோ அல்லது ஆய்வுக் கட்டுரையிலோ மேற்கோள் காட்டப்பட்ட பல உரலிகள் சில மாதங்கள் பின்பு இயங்காமல் போய்விடுகின்றன. மேற்கோள்களை… Read More »