கணியம் – இதழ் 21
வணக்கம். ‘கணியம்‘ இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். செப்டம்பர் 30, 2013 அன்று சென்னையில் தமிழ் விக்கிபீடியாவின் பத்தாண்டுகள் கொண்டாட்ட நிகழ்ச்சியில், “எளிய தமிழில் GNU/Linux பாகம் – 2” வெளியிடப்பட்டது. kaniyam.com/gnu-linux-book-in-tamil-part2 என்ற முகவரியில் இருந்து இந்த நூலை பதிவிறக்கம் செய்யலாம். தமிழில் நுட்பங்களை எழுதி, கிரியேட்டிவ் காமன்ஸ் எனும் கட்டற்ற உரிமத்தில் வெளியிடுவதை பாராட்டி, செல்வா-குமரி அறக்கட்டளையின் பரிசாக, பேராசிரியர் திரு. சி.இரா.செல்வகுமார், பேராசிரியர், வாட்டர்லூ பல்கலைக்கழகம்,… Read More »