Category Archives: Open source softwares

விடையளி – தமிழ்ச்சொல் வளத்திற்கு ஒரு தேர்வு

திரு. விஜய்ராஜ், இப்பக்கத்தில் சில தமிழ்க்கேள்விகள் தொகுத்து வருகிறார். தமிழ் சொல்வளம் பெருக அவர் இதை ஒரு விளையாட்டு போல இதில் நடத்தி வருகிறார். இதில் புகுபதிந்து யார் வேண்டுமானாலும் கேள்விகளைச் சேர்க்கலாம். எனவே, உங்களுக்கு நேரமிருப்பின் நீங்களும் நல்லக் கேள்விகளை இதில் சேர்த்தால் அவருக்கு உதவியாய் இருக்கும். அதே சமையத்தில் இந்தத் தளத்தை பயன்படுத்துவோருக்கும் நல்லதாய் அமையும். vidaiyali.herokuapp.com இது ஒரு கட்டற்ற மென்பொருள். Ruby On Rails, PostgreSQL ல் எழுதப்பட்டது. மூலநிரல் –… Read More »

வேதியியல் விளையாட்டு – kalzium

நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் உணவு முதல் விண்வெளியில் சுழலும் செயற்கை கோள் வரை அனைத்திலும்  வேதியியல்  பொருட்கள்  தான் உள்ளன. இதை பற்றி வேதியியல் பாடத்திலும், ஆய்வு  கூடங்களிலும் பார்த்தும் படித்துமிருப்போம். பள்ளி ஆய்வு கூடத்தில் சில முக்கிய தனிமங்களை படத்தில் மட்டுமே காண முடியும். அவற்றை குழந்தைகள் எளிதில் புரிந்த கொள்ளும் வகையில் உருவாக்க பட்டதே “கால்சியம்”. கால்சியம் என்பது கட்டற்ற ஆவர்த்தன அட்டவணை (Periodical table) மென்பொருள். இது தனிமிங்களை பற்றிய விவரங்கள் அறிந்து… Read More »

Scilab அறிமுகம்

Scilab ஒரு திறந்த இலவச மென்பொருள் ஆகும்,  அது பயனருக்கு தோதான எண் மற்றும் கணித  package  ஆகும்.  அது பல அறிவியல் பொறியியல் பாடங்களிலும் பயனாகிறது. Windows, Linux மற்றும்  Mac OS/X போன்ற பல  இயங்கு தளங்களுக்கும் கிடைக்கிறது. Scilabன் உச்சரிப்பு “Sci”  Scientific போலவும் “Lab” Laboratory போலவும் இருக்க வேண்டும். Scilab    ஒரு திறந்த இலவச மென்பொருள் என்பதால் பயனர்கள் பின்வருவனவற்றை செய்யலாம்: source codeஐ பார்த்து தேவையானபடி மாற்றிக்கொள்ளலாம் source… Read More »

கட்டற்ற மென்பொருளும் அறிவியலும் – பகுதி 5

Jmol – முப்பரிமாண வேதியியல் மூலக்கூறுகளை காண உதவும் கட்டற்ற மென்பொருள் அறிமுகம் J mol (Java molecular) ஒரு வேதியியல் மூலக்கூறுகளை முப்பரிமாணத்தில் காண உதவும் கட்டற்ற மென்பொருள். இது ஜாவா நிரலாக்க மொழியில் எழுதப்பட்டுள்ளது. எனவே இதனை அனைத்து இயங்குதளங்களிலும், Applet ஆக ஜாவா உதவியுடன் அனைத்து இணைய உலாவிகளிலும் (Browsers) பயன்படுத்தலாம். மேலும் Jmol viewer – development toolkit ஐ பயன்படுத்தி மற்றி ஜாவா மென்பொருளுடன் இணைத்துக்கொள்ளலாம். இம்மென்பொருளின் பல்வேறு சிறப்பம்பசங்களால்… Read More »

சென்டால் (Zentyal) – தகவல் தொழில்நுட்ப அடிப்படை கட்டமைவு

Zentyal எனும் திறமூலமென்பொருள் தகவல் தொழில்நுட்ப அடிப்படை கட்டமைவுகளை திறனுடன் நிருவகிக்க உதவி புரிகிறது. இது ஒரு லினக்ஸை அடிப்படையாக கொண்ட வியாபார சேவையாளராகும். இது மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் சிறு வியாபார சேவையாளர் மற்றும், பரிமாற்ற சேவையாளர் ஆகிய இரண்டிற்கு மாற்றானதாகவும் விளங்குகின்றது. இது எளிமை, மிகக் குறைந்த கால அவகாசத்தில் நிறுவுகை செய்து பயன்படுத்திக் கொள்ளும் தன்மை குறைந்த பராமரிப்பு என்பன போன்றவை இதனை அனைவரும் விரும்பும் காரணிகளாக உள்ளன. இதன் பயன்கள் பின்வருமாறு… Read More »

கட்டற்ற மென்பொருளும் அறிவியலும் – பகுதி 4

நானோ தொழில்நுட்பத்திற்கான கட்டற்ற மென்பொருள் CNT அறிமுகம் Carbon Nanotube (மீநுண் கரிக்குழல்) என்பதன் சுருக்கமே CNT. குழல் போன்ற அமைப்பைக் கொண்ட CNT கரிமத்தால் (Carbon) ஆனது. ஏறக்குறைய 3-10 nm விட்டமும், சில நூறு மைக்ரான்கள் நீளமும் கொண்டது. (நானோமீட்டர் – 10^(-9) அதாவது ஒரு சென்டிமீட்டரை ஒரு கோடி கூறுகளில் ஒரு பங்கு. நம் தலைமுடியின் தடிமன் 100 மைக்ரான், இது நானோ மீட்டரில் 100000nm.) இது எதற்கு பயன்படும்? இதை வைத்து… Read More »

லிப்ரெஓபிஸ் (Libre Office) முன்னேற்றம் – தமிழாக்கம்

நண்பரே, வணக்கம். கட்டற்றத் திறவுற்று மென்பொருட்களில் லிப்ரெஓபிஸ் ஒரு முக்கிய இடத்தை வகிக்கின்றது. அதனைத் தமிழாக்கும் பணியை 2011 ஆண்டு முதற்கொண்டு நாம் மெற்கொண்டு வருகின்றோம். கடந்த ஆண்டு லிப்ரெஓபிஸ் முழுமையாக தமிழாக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இவ்வாண்டு, லிப்ரெஓபிஸின் புதிய வெளியீடுகள் வெளிவந்துள்ளன. அடுத்த மாதம் 22 ஆம் திகதி லிப்ரெஓபிஸ் 4.3 வெளிவரவிருக்கிறது. அப்பதிப்பும் முழுமையாக தமிழில் இருக்க வேண்டும் என விரும்புகிறோம். இதுவரை அதன் ஒரு இலட்சம் சொற்களில் 88 ஆயிரத்தை தமிழுக்கு மொழிபெயர்த்து விட்டோம்.… Read More »

கட்டற்ற மென்பொருளும் அறிவியலும் – பகுதி 3

மின்சுற்று வரைபடங்கள் கல்லூரியில் பயிலும் இயற்பியல் மாணவர்கள் தங்கள் செய்முறை வகுப்புகளில் சில அடிப்படை மின்சுற்றுகளை அமைத்து வேலை செய்யும் விதத்தை அறிந்திருப்பர். பல்தொழில்நுட்பம், பொறியியலில் பயிலும் ECE, EEE மாணவர்கள் மின்சுற்றுகளைப் பற்றி அதிகம் அறிந்திருப்பர். இதுபோன்ற மின்சுற்றுகளுக்கும், மின்சுற்று ஒப்புச் செயலாக்கத்திற்கும் (Circuit Simulation) ஆட்டோகேட் (Auto CAD) போன்ற வர்த்தக மென்பொருள்களைப் பயன்படுத்தி வருகின்றனர். லினக்ஸிலும் இதுபோன்று மின்சுற்றுக்களை அமைப்பதற்கும், அமைக்கப்பட்ட மின்சுற்றினைச் சோதிப்பதற்கும், இறுதியாக உருவாக்கப்பட்ட மின்சுற்றினைப் பொருத்துவதற்கு, அச்சிட்ட மின்சுற்றுப்… Read More »

பிகல்லியோடு (Pically) உங்கள் நாள்காட்டியை உருவாக்குங்கள்

புகைப்படங்கள் முடிவுற்ற காலத்தின் நினைவுகளைக் குறிக்கின்றன. நாள்காட்டி வருங்காலத்தைக் குறிக்கும். இவ்வாறு வெவ்வேறு காலங்களில் அடைபட்டுக் கிடக்கும் இரண்டையும் ஒருங்கிணைக்கும் பாலமாக விளங்குவது தான் பிகல்லி (Pically). உங்களுக்கு மிகவும் பிடித்த புகைப்படங்களை ஒவ்வொரு மாதங்களுக்கும் தேர்வு செய்து, விடுமுறை மற்றும் சுபதினங்கள் ஆகியவற்றைச் சேர்த்து, ஒரு நாள்காட்டியாக உருவாக்கி தொங்க விடலாம். இதுவரை நடந்த நிகழ்வுகளை நினைவு கூறுவதாகவும், வருங்கால கனவுகளைக் கண்முன் கொண்டு வருவதாகவும் அது அமையும். இது ஜாவா நிரல் மொழியால் உருவாக்கப்பட்ட… Read More »

OSSEC-HIDS – மேகக்கணினி சூழலிற்கான பாதுகாப்பு அரண்

எழுத்து: ச.குப்பன் பல பெரிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள், தங்களுடைய தரவுகளைத் தேக்கி வைத்துக் கொள்ளவும், பல்வேறு பணிகளைக் கையாளவும், மேகக்கணினி (Cloud Computing) எனும் சேவைக்கு மாறி வருகின்றன. மேகக்கணினி சேவையில் ஏராளமான அபாயங்களும், பாதுகாப்பு குறைபாடுகளும் உள்ளன என்பது கண்கூடாக தெரிந்ததே! இந்த மேகக்கணினியின் சேவையினை கீழ்காணுவது போல மூன்றாகப் பிரித்தரியலாம்: கட்டமைவு சேவை (Infrastructure as a service (IaaS)) தளச்சேவை (Platform as a Service(PaaS)) மென்பொருள் சேவை (Software as… Read More »