Category Archives: programming

 எந்தவொரு கணினி மொழியையும் எளிதாக கற்றுகொள்வதற்கான ஐந்து படிமுறைகள்

ஒருசிலர் புதிய நிரலாக்க(கணினி) மொழிகளைக் கற்க விரும்புகிறார்கள். வேறுசிலர் அவ்வாறு விரும்பவில்லை ஆயினும் அவ்வாறு கற்கவிரும்பாதவர்கள் கூட பின்வரும் ஐந்து படிமுறைகளை மட்டும் பின்பற்றி எளிதாக எந்தவொரு புதிய நிரலாக்க(கணினி) மொழியையும் கற்றுக் கொள்ள முடியும். இந்த கட்டுரையில், ஒரு நிரலாளரைப் போல எவ்வாறு சிந்திக்க வேண்டும் என்பதை காண்பிக்கப் படுகின்றது, இதன் மூலம் புதியவர்எவரும் எந்தவொரு நிரலாக்க(கணினி)மொழியையும் நம்பிக்கையுடன் கற்றுக்கொள்ள முடியும் என்பது திண்ணம். உண்மை என்னவென்றால், நாம் எவ்வாறு நிரலாக்கம் செய்வது எனும் படிமுறையை… Read More:  எந்தவொரு கணினி மொழியையும் எளிதாக கற்றுகொள்வதற்கான ஐந்து படிமுறைகள் »

GNU Octave எனும் உயர் நிலை கணினிமொழி ஒரு அறிமுகம்

குனு ஆக்டேவ் என்பது ஒரு உயர் நிலை கணினி மொழியாகும், இது முதன்மையாக எண் கணக்கீடுகளை எளிதாக செயல்படுத்திடும் நோக்கத்திற்கு உருவாக்கபபட்டதாகும் . இது பொதுவாக நேரியல் (linear) , நேரியல் அல்லாத (nonlinear) சமன்பாடுகளைத் தீர்வுசெய்வதற்கும், எண்களாலான நேரியல் இயற்கணிதம், புள்ளிவிவர பகுப்பாய்வு ,பிற எண்களாலான சோதனைகளைச் செய்வது என்பன போன்றவைசிக்கல்களை எளிதாக தீர்வு செய்வதற்காகப் பயன்படுத்திகொள்ளப்படுகிறது. இது தானியங்கி தரவுகளின் செயலாக்கத்திற்கான தொகுப்பினை சார்ந்த மொழியாகவும் பயன்படுத்திகொள்ளலாம். இதனுடைய தற்போதைய பதிப்பானது ஒரு வரைகலை… Read More: GNU Octave எனும் உயர் நிலை கணினிமொழி ஒரு அறிமுகம் »

Video on Machine Learning Algorithms in Tamil – இயந்திர வழிக் கற்றல் நெறிமுறைகள் அறிமுகம் – காணொளி

Introduction to Machine Learning Algorithms in Tamil Simple Linear regression Multiple Linear Regression இயந்திர வழிக் கற்றல் நெறிமுறைகள் அறிமுகம் மேலும் அறிய, பின் வரும் இணைப்புகள், நிரல்களைக் காண்க.   www.kaniyam.com/machine-learning-part-4/

எழில் மொழி – பங்களிப்பாளர் சந்திப்பு 2018 – சில குறிப்புகள்

எழில் மொழி என்பது, தமிழிலேயே கணினியில் நிரலாக்கம் செய்ய உதவும் ஒரு நிரல் மொழி. இது ஒரு கட்டற்ற மென்பொருள். மூல நிரலுடன், யாவருக்கும் பகிரும், மாற்றங்கள் செய்து வளர்த்தெடுக்கவும் உரிமையோடு தரப்படுகிறது. அமெரிக்காவில் கணினி விஞ்ஞானியாகப் பணிபுரியும், திரு. முத்து அண்ணாமலை அவர்கள் 2012 ஆண்டுகளில், தமிழில் ஒரு நிரல் மொழியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றி கண்டார். அதை ஒரு கட்டற்ற மென்பொருளாக வெளியிட்டார். அதைக்கண்ட பல கட்டற்ற மென்பொருள் நிரலாளர்கள், இணைந்து பங்களிக்கத்… Read More: எழில் மொழி – பங்களிப்பாளர் சந்திப்பு 2018 – சில குறிப்புகள் »

செயல்பாட்டு நிரலாக்க அடிப்படைகள் – பகுதி 1

இதுநாள்வரையில் பொருள்நோக்குநிரலாக்கத்தைப் (object oriented programming) பயன்படுத்தியே நிரலெழுதி வருவோர், செயல்பாட்டு நிரலாக்கத்தைக் (functional programming) கற்றுக்கொள்ளவேண்டுமென்றால் அதன் அடிப்படைக்கருத்துக்களை அறிந்துகொள்ளவேண்டியது அவசியம். முதலில் இது சற்றே கடினமான விசயமாகத்தெரிந்தாலும், சரியான கோணத்திலிருந்து அணுகும்போது எளிமையானதாகவே இருக்கிறது. முதன்முதலில் ஒரு வாகனத்தை ஓட்டக்கற்றுக்கொள்ளும்போது மிகவும் சிரமப்பட்டு கற்றுக்கொள்கிறோம். பிறர் செய்வதைக்காணும்போது எளிமையாகத்தோன்றினாலும், நாமே செய்யும்போது நாம் நினைத்ததைவிட கடினமானதாகவே இருந்தது. மிதிவண்டியை வாடகைக்கு எடுத்துக்கொண்டு, அக்கம்பக்கத்து தெருக்களில் சுற்றித்திரிந்து பழகுகிறோம். பலமுறை விழுந்தெழுந்து, முட்டிமோதி சைக்கிள் ஓட்டக்கற்றுக்கொண்டுவிட்டோம்.… Read More: செயல்பாட்டு நிரலாக்க அடிப்படைகள் – பகுதி 1 »

பைத்தானும் டிஜாங்கோவும் இணைத்து உருவான இணையபயன்பாடு

புதியவர்கள்கூட விண்டோவில் இயங்கும் இணையப் பயன்பாடுகளை பைத்தானும் டிஜாங்கோவும் இணைந்தசூழலில் எளிதாக உருவாக்கமுடியும். இங்கு டிஜாங்கோஎன்பது பைத்தான் மொழியால் உருவாக்கபட்ட தொரு கட்டற்ற இணையப்பயன்பாடுகளின்வரைச்சட்டமொழியாகும் இந்த இணைய பயன்பாடுகளின் வரைச்சட்டமொழியானது மாதிரி காட்சிகளைக் கட்டுபடுத்தும் கட்டமைவை பின்பற்றுகின்றது. அதாவது இங்குக் காட்சி என்பது வரைகலை கட்டமைவை பயன்படுத்தவதைபோன்று பயனாளர் ஒருவர் தான் திரையில் காணும் காட்சியை இடைமுகம்செய்து பயன்படுத்திக் கொள்வதாகும்.. பொதுவாக புதிய பயன்பாடுகளை உருவாக்குவதற்கு அடிப்படையாக IDE சூழல் தேவையாகும். இங்கு Eclips என்பது அதற்காகப்… Read More: பைத்தானும் டிஜாங்கோவும் இணைத்து உருவான இணையபயன்பாடு »

கட்டற்ற கோ எனும் நிரல்தொடர்மொழியை அறிந்துகொள்க

Go என்பது கணினியின் அமைவு செயல்முறையை மனதில்கொண்டு பொதுபயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டஒரு நிரல்தொடர்மொழியாகும். . இந்த கோஎனும் மெழியானது கூகுள் நிறுவனத்தின் Robert Griesemer, Rob Pike, Ken Thompson. ஆகியோரால் சேர்ந்து 2007இல் உருவாக்கப்பட்டு பொதுப்பயன்பாட்டிற்காக 2009இல் வெளியிடப்பட்டது. இது மென்பொருள் உருவாக்குபவருக்கு ஒருவலுவான நிலையானவகையில் குப்பையான கட்டளைகள் அனைத்தையும் சேகரித்து ஒதுக்குவதற்கான உள்ளக கட்டமைப்பை வழங்குகின்றது. இது கட்டளைகள் அனைத்தும் ஒன்றுசேரும் புள்ளியை சார்ந்துள்ளதை திறனுடன் நிருவகிப்பதற்கான செயல்முறையை ஆதரிக்கின்றது என்ற அடிப்படையை பயன்படுத்தி இந்த… Read More: கட்டற்ற கோ எனும் நிரல்தொடர்மொழியை அறிந்துகொள்க »

டார்ட் எனும் கட்டற்ற நிரல்தொடர் மொழி

இது கூகுள் நிறுவனத்தால் பராமரிக்கபடும் ஒரு கட்டற்ற விரிவாக்கத்தக்க நிரல் தொடர் மொழியாகும். இது கற்பதற்கு எளிதான இணைய பக்கங்களை உருவாக்கிடவும் செல்லிடத்து பேசிகளின் பயன்பாடுகளை உருவாக்கிடவும் பயன்படும் ஒரு சிறந்த நிரல்தொடர்மொழியாகும். இது புதிய நிரல்தொடர் மொழி மட்டுமன்று. நவீi இணையjf பக்கங்களை கட்டமைத்து மேம்படுத்துவதற்கான சிறந்ததொரு திறன்மிக்க தளமாக விளங்குகின்றது. இந்த டார்ட் ஆனது ஜாவா மொழி போன்று வாடிக்கையாளர்கள் கட்டமைக்கபட்ட வடிவமைப்பை கட்டாயபடுத்தாத மொழியாகும். மேலும் இதில் ஜாவா மொழி,போன்று ஒழுங்கற்றநிலையை நோக்கி… Read More: டார்ட் எனும் கட்டற்ற நிரல்தொடர் மொழி »

Scilab அறிமுகம்

Scilab ஒரு திறந்த இலவச மென்பொருள் ஆகும்,  அது பயனருக்கு தோதான எண் மற்றும் கணித  package  ஆகும்.  அது பல அறிவியல் பொறியியல் பாடங்களிலும் பயனாகிறது. Windows, Linux மற்றும்  Mac OS/X போன்ற பல  இயங்கு தளங்களுக்கும் கிடைக்கிறது. Scilabன் உச்சரிப்பு “Sci”  Scientific போலவும் “Lab” Laboratory போலவும் இருக்க வேண்டும். Scilab    ஒரு திறந்த இலவச மென்பொருள் என்பதால் பயனர்கள் பின்வருவனவற்றை செய்யலாம்: source codeஐ பார்த்து தேவையானபடி மாற்றிக்கொள்ளலாம் source… Read More: Scilab அறிமுகம் »

தமிழ் மொழி சார்ந்த கட்டற்ற மென்பொருட்கள் – திட்டப்பணி

தமிழ் மொழி சார்ந்த கட்டற்ற மென்பொருட்களின் தேவை பெருமளவில் உள்ளது. அவற்றை உருவாக்கவும், நிரலாளர்களை ஊக்குவிக்கவும் Google Summer of Code போன்ற திட்டம் ஒன்றை செயல்படுத்தலாம். திட்டப்பணிகள் 1. தமிழ் மொழி சார்ந்த மென்பொருட்களை பட்டியலிடுதல். உங்களுக்கு தேவையான மென்பொருட்களின் பட்டியலை tshrinivasan@gmail.com க்கு அனுப்புக. அவை கணிணி, மொபைல் சார்ந்து இருக்கலாம். மொழியியல், வணிகம், விளையாட்டுகள் என எத்துறையிலும் இருக்கலாம். 2. வல்லுனர் குழு உருவாக்கம் பட்டியல் வெளியானதும், வல்லனர் குழு உருவாக்க வேண்டும்.… Read More: தமிழ் மொழி சார்ந்த கட்டற்ற மென்பொருட்கள் – திட்டப்பணி »