கணியம் அறக்கட்டளை சனவரி 2023 – பெப்ரவரி 2024

Report in Tamil

Report in English

கணியம் அறக்கட்டளை சனவரி 2023 – பெப்ரவரி 2024

தொலை நோக்கு

தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல்

பணி இலக்கு

அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.

நிகழ்ச்சிகள்

செயல்கள்

எண்செயல்கள்மொத்தம்
1FreeTamikEbooks.com மின்னூல்கள்857
2Kaniyam.com கட்டுரைகள்1746
3Tamil Linux Community காணொளிகள்107
4Kaniyam Foundation காணொளிகள்116
5Tamil Linux Community உரையாடல்கள்5500

கணியம் தளத்தில் நிறைவு பெற்ற தொடர்கள்

பின்வரும் தொடர்கள் கணியம் தளத்தில் வெளியிடப்பட்டு நிறைவு பெற்றன. விரைவில் மின்னூலாக்கி வெளியிடுவோம்.

சோவியத் ரஷ்யா நூல்கள் , சிற்றிதழ்களை மின்னூலாக்குதல்

ரொறன்ரோ பல்கலைக்கழகம் ஸ்காபரோ, கனடா உடன் இணைந்து ‘சோவியத் ரஷ்யா நூல்கள் , சிற்றிதழ்களை மின்னூலாக்குதல்’ என்ற திட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.

இது வரை 187 சோவியத் ரஷ்யா நூல்களையும் , 500 சிற்றிதழ்களையும் மின் வருடல் செய்து மின்னூலாக்கியுள்ளோம். அவற்றின் மீ விவரங்களை சேர்த்து விரைவில் வெளியிடுவோம்.

Forums.TamilLinuxCommunity.org

TamilLinuxCommnity என்ற குழுவை யுடியூப் சேனலாகத் தொடங்கி, பின் டெலிகிராம் குழுவாகவும் உருவாக்கினோம். ஆனால் டெலிகிராமின் உரையாடல்கள் பொதுவில் இல்லை என்பதால், Forums.TamilLinuxCommunity.org என்ற உரையாடல் களத்தை தொடங்கினோம். தமிழில் கட்டற்ற மென்பொருள் பற்றி கேள்வி கேட்கவும், பதில் தரவும் ஏதுவான சிறந்த களமாக உள்ளது. இதுவரை 5,500+ உரையாடல்கள் நடந்துள்ளன. இத்தளம் நுட்பங்களுக்கான ஒரு சிறந்த உரையாடல் களமாகப் பங்களித்து வருகிறது.

தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு 2020, 2022, 2023

முதல் தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாட்டை 2020 ல் இணைய வழியில் நடத்தினோம். இரண்டாவது மாநாட்டை 2022 ல் நேரடி நிகழ்வாக நடத்தினோம். விவரங்களுக்கு TossConf22.kaniyam.com

கட்டற்ற மென்பொருள் மாநாடு 2023 பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து நேரடி, இணைய நிகழ்வுகளுடன் சிறப்பாக நடந்தது.. TossConf23.kaniyam.com

கிரியேட்டிவ் காமன்சு ( Creative Commons ) உரிமையில் நூல்களைப் பெறுதல்

பல்வேறு நூலாசிரியர்களை சந்தித்து அவர்களிடம் கிரியேட்டிவ் காமன்சு உரிமை பற்றி விளக்கி, அவர்களது படைப்புகளை கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் தரக் கோருகிறோம்.

பலரும் மனமுவந்து தமது படைப்புகளை உலகத் தமிழர் அனைவருக்கும் கொடையாக அளிக்கின்றனர்.

விவரங்களை இங்கே பதிவு செய்கிறோம். github.com/KaniyamFoundation/CreativeCommonsAnnouncements/issues

சென்ற ஆண்டு கண்ட எழுத்தாளர்கள்

  • கடவூர் மணி மாறன்
  • மஞ்சை வசந்தன்
  • எச்.முஜீப் ரஹ்மான்
  • கிருஷ்ண பிரசாத்
  • இந்தியா யுனைடட்
  • தமிழண்ணல்
  • வே.வே. ஆனை முத்து
  • பாத்திமா மைந்தன்
  • அறந்தை நாராயணன்
  • செல்வேந்திரன்
  • தாழை மதியவன்
  • பெரு முருகன்

பேராசிரியர் தொ. பரமசிவன் அவர்களின் மின்னூல்களுக்கான வலைத்தளம்

பேராசிரியர் தொ. பரமசிவன் அவர்களின் மின்னூல்களைத் தொகுத்து தனி வலைத்தளமாக வெளியிட்டுள்ளோம். காண்க – thopa.FreeTamilEbooks.com

மேலதிக விவரங்களுக்கு – kaniyam.com/ebooks-portal-for-tho-paramasivan-books/

ஈமேக்சு உரைத்திருத்தி – காணொளிகள்

ஈமேக்சு என்பது அதிக திறன் வாய்ந்த ஒரு உரைத்திருத்தி. தமிழில் முதல் முறையாக ஈமேக்சு பயன்படு்த்துவது பற்றி, காஞ்சி லினக்சு பயனர் குழுவின் தங்க அய்யனார், பல்வேறு காணொளி பாடங்களை வெளியிட்டுள்ளார்.

காண்க – www.youtube.com/watch?v=VQCYGoC5uqg&list=PL0vwHm0AGyYP8yg0DZc8ApOEI7mw75U70

கணக்கு

அக்டோபர் Oct 2018 முதல் இதுவரை

மொத்த நன்கொடை – Rs 9,83,071

மொத்த செலவுகள் – Rs 8,84,898

இருப்பு – Rs 98,173

இந்த இணைப்பில் அனைத்து வரவு, செலவு விவரங்கள் பகிரப்படுகின்றன. docs.google.com/spreadsheets/d/1zBXZzjYP_WKfm4y3EpTYw5yOTOeA-sSp8mcNjjNAUe0/edit#gid=0

வங்கிக் கணக்கு விவரங்கள்

Kaniyam Foundation
Account Number : 606 1010 100 502 79
Union Bank Of India
West Tambaram, Chennai
IFSC – UBIN0560618

  • உங்கள் நன்கொடைகளை இந்தக் கணக்குக்கு அனுப்பி, கணியம் அறக்கட்டளை செயல்களை ஆதரிக்க வேண்டுகிறோம்.
  • நன்கொடைகளை அனுப்பியபின், உங்கள் பெயர்,நன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு அனுப்ப வேண்டுகிறோம்.

மேலும் விவரங்களுக்கு எழுதுக – kaniyamfoundation@gmail.com

பல்வேறு செயல்கள் வழியாக பங்களிக்கும் அனைவருக்கும் பல்லாயிரம் நன்றிகள்.

நீங்களும் மேற்கண்ட பணிகளுக்கு பங்களிக்க, எங்களுக்கு மின்னஞ்சல் எழுதுக.

குறிப்பு

பல்வேறு காரணங்களால், ஒரு ஆண்டுக்கும் மேலாக, மாத அறிக்கை அனுப்பத் தவறி விட்டோம். அருள்கூர்ந்து மன்னிக்கவும். இனி ஒவ்வொரு மாதமும் அனுப்புவோம். தவறினால், தயங்காமல் சுட்டிக்காட்ட வேண்டுகிறோம். நன்றி.

%d bloggers like this: