HTML5 – ன் புதிய வசதிகள்

HTML5 – ன் புதிய வசதிகள்: HTML5-ல் ஊடகக் கோப்புகள், 2D/3D வரைபடங்கள், Forms போன்றவற்றைப் பயன்படுத்த பல புதிய வசதிகள் உள்ளன. ஊடகம்(Media) : – <audio> – இது ஒலிக் கோப்புகளை இயக்க உதவுகிறது. <video> – இது காணொளிகளை வெளிப்படுத்த உதவுகிறது. <source> – இது ஒலி / ஒளி உள்ளிட்ட பல்வேறு ஊடக மூலங்களைக் குறிக்கப் பயன்படுகிறது. <track> – இது ஒலிக்கோப்பு / ஒளிக்கோப்புகளுக்கான உரையை text track-ஐப் பயன்படுத்தி வெளிப்படுத்த உதவுகிறது. … Read More »

HTML5 ஒரு அறிமுகம்

இதுவரை நாம் பார்த்த html-ஆனது html5 என்று புதுப்பிறவி எடுத்துள்ளது. இது பல புதிய அம்சங்களை வலைத்தளங்களில்  உருவாக்கப் பயன்படுகிறது. மூலம் – commons.wikimedia.org/wiki/File:Logozyrtare.jpg மேலும் வலைத்தளங்களை கணினி, அலைபேசி, Tablet போன்ற பல்வேறு கருவிகளின் வழியாகப் பார்க்கும்போதும், அதன் வடிவமைப்பில் எவ்வித மாற்றமும் ஏற்படாமல்,  வலைத்தளமானது சீராகக் காட்சியளிக்க பின்வரும் நுட்பங்கள் பயன்படுகின்றன. மூலம் – daphyre.deviantart.com/art/HTML5-Logos-and-Badges-380429526   HTML5 – இணையப் பக்கத்தின் அடிப்படைக் கட்டமைப்பைக் கூறுகிறது. CSS 3 – இது நாம் திரையில் பார்ப்பவற்றை அழகாக்குவதுடன் user… Read More »

இணைய நடுநிலைமை – வலைநொதுமை – NetNeutrality – சிறுகதை

நேத்திபுரம் பேருந்து நிறுத்தம் ஒன்றும் சொல்லிக்கொள்ளும் படியானதோ முக்கியமானப் பேருந்து நிறுத்தமோ அல்ல. இந்தியப் பேருந்து நிறுத்தங்களுக்கே உரியதான தூசியும் தும்புமான ஒன்றுதான் இதுவும். இந்தப் பேருந்து நிறுத்தத்தைச் சுற்றி வீடுகளோ கடைகளோ கிடையாது. வெறும் பொட்டல் காடுதான். சுற்றுப்புறத்தில் இருக்கும் நான்கு கிராமங்களில் இருந்து நகரத்துக்கு வேலைக்குச் செல்பவர்களைச் சுமந்து செல்வதற்காக ஆறு பேருந்துகள் ஒரு நாள் முழுவதற்கும் வந்து செல்லும். அந்தப் பேருந்து நிலையத்தை ஒட்டியிருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த அப்பு என்ற சிறுவன்… Read More »

எளிய தமிழில் HTML – 7 – HTML5

HTML5 என்பது சற்றே வித்தியாசமானது. நமது வலைத்தளத்திற்கு மேலும் அழகு சேர்க்கக் கூடியது. இதன் துணைகொண்டு ஒலி/ஒளி கோப்புகள் மற்றும் 2D/3D படங்கள் ஆகியவற்றை நமது வலைத்தளத்தில் வெளிப்படுத்தலாம். மேலும் தகவல்களை application-ல் சேமிப்பது, அவற்றைப் பயன்படுத்துவது மற்றும் real-time protocols மூலம் சேமித்த தகவல்களைப் பரிமாறிக் கொள்வது போன்ற பல சிறப்பான வேலைகளையும் javascript மற்றும் css ஆகியவற்றின் துணைகொண்டு html5 செய்கிறது. HTML5-ம் ஒரு சாதாரண html program-க்கான syntax-ஐயே பெற்றிருக்கும். இது பின்வருமாறு.… Read More »

எளிய தமிழில் HTML – 6 – Forms

Forms இதுவரை எத்தகைய வடிவிலெல்லாம் தகவல்களை பயனர்களுக்கு வெளிப்படுத்துவது என்று பார்த்தோம். இப்போது படிவங்கள் மூலம் எவ்வாறு பயனர்களிடமிருந்து தகவல்களை பெற்றுக்கொள்வது என்று பார்க்கப்போகிறோம். <form> tag ஒரு் படிவத்தை உருவாக்க <form> tag-ஐ <body>-க்குள் கொடுக்க வேண்டும். இதற்கான இணை tag படிவம் முடியும்போது இடம்பெறும். இந்த <form>-க்கு method மற்றும் action என்று இரண்டு பண்புகள் உள்ளன. method-க்கு post எனும் மதிப்பும், action-க்கு படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விவரங்களை எங்கு அனுப்ப வேண்டும்… Read More »

எளிய தமிழில் HTML – 5 – Frames

ஒரு் link-ஐ சொடுக்கும்போது, அதன் வெளிப்பாடு ஒரு் புதிய பக்கத்தில் இடம்பெறாமல், அதே பக்கத்தில் இடம்பெறுமாறு செய்ய frames உதவுகிறது. இதன் மூலம் திரையைக் குறைந்தபட்சம் இரண்டு பகுதிகளாகப் பிரித்து, முதல் பகுதியில் links-ம் அடுத்த பகுதியில் அதற்கான வெளிப்பாடும் வருமாறு செய்யலாம். <frameset> tag இது திரையை பல பிரிவுகளாகப் பிரிக்க உதவுகிறது. இதன் cols-எனும் attribute திரையை இடமிருந்து வலமாகவும், rows-எனும் attribute திரையை மேலிருந்து கீழாகவும் பிரிக்க உதவுகிறது. இத்தகைய பண்புகளின் மதிப்புகளை… Read More »

Advanced MySQL – Ranks

Ranks ஏதேனும் ஒரு் column-ல் உள்ள மதிப்புகளை ஏறுவரிசையிலோ, இறங்குவரிசையிலோ முறைப்படுத்திவிட்டு பின்னர் அதற்கு 1,2,3…. என மதிப்புகளைக் கொடுப்பதே ranking எனப்படும். mysql-ல் ranking என்பது variables-ஐ வைத்தே நடைபெறுகிறது. @ எனும் குறியீடு இது ஒரு் variable என்பதை உணர்த்துகிறது. SET எனும் command முதன்முதலில், variable-க்கு ஒரு் மதிப்பினை வழங்கப் பயன்படுகிறது.   Query-61   SET @var1:= 0; SELECT emp_name,salary,@var1:= @var1+ 1 AS rank FROM organisation ORDER… Read More »

Advanced MySQL – Set Operators

Set Operators   Union, Unionall, Intersect, Minus ஆகிய நான்கும் set operators ஆகும். இரண்டு table-களில் இத்தகைய set operators-ஐப் பயன்படுத்தும் போது எப்படித் தகவல்கள் வெளிவருகின்றன என்பதைப் பின்வரும் படத்தின் மூலம் சுலபமாகப் புரிந்து கொள்ளலாம்.   Union & Union All UNION என்பது இரண்டு வெவ்வேறு table-களில் இருக்கும் தகவல்களை ஒன்றாக இணைத்து வெளிப்படுத்துகிறது.   Query-57 உதாரணத்துக்கு ஒரு் நிறுவனத்தில் உள்ளவர்கள் சென்ற வருடத்திலிருந்து இந்த வருடத்துக்கு பதவி… Read More »

Advanced MySQL – SubQueries

Subqueries   Sub query – ஐப் பற்றிக் கற்பதற்கு முன்னர் முதலில் அதன் அவசியத்தைத் தெரிந்து கொள்வோம். பின்வரும் உதாரணத்தில், ஒரு் அலுவலகத்திலுள்ள ஒவ்வொரு துறைக்கும் குறைந்தபட்ச சம்பளம் எவ்வளவு தரப்படுகிறது என்பதைக் கண்டுபிடிக்க பின்வரும் query-யைப் பயன்படுத்தலாம்.                   பின்னர் IT_Finance-துறைக்கு அளிக்கப்படும் குறைந்தபட்ச சம்பளத்தைவிட அதிகமாக வாங்கும் துறைகளின் குறைந்த சம்பளத்தைக் கணக்கிட பின்வரும் query-யைப் பயன்படுத்தலாம்.   select department,min(salary)… Read More »

Advanced MySQL – Joins

JOIN   இரண்டு வெவ்வேறு table- ல் இருக்கும் ஒரு பொதுவான column- ஐப் பயன்படுத்தி அவற்றை இணைத்து , அதன்பின் இரண்டிலிருந்தும் தகவல்களைப் பெறுவதற்கு JOIN பயன்படுகிறது .   இதனை Inner Join, Outer Join, Cross Join என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம் . Outer Join- ஐ left outer, right outer என்று இரண்டு வகையாகப் பிரிக்கலாம் . இவை எவ்வாறு இணைந்து தகவல்களை வெளிப்படுத்துகின்றன என்பதைப் பின்வரும் படத்தின்… Read More »