Author Archives: கணியம் பொறுப்பாசிரியர்

மின்னுருவாக்கத்திட்டம் – தமிழ் இணையக் கல்விக்கழகம்

உங்களிடம் உள்ள அரிய நூல்களை / புகைப்படங்களை இலவசமாக மின்னுருவாக்கம் (DIGITAL) செய்யவேண்டுமா? தகவல் அளிக்கவேண்டிய அலைபேசி எண்கள்: திரு.இரா.சித்தானைஆய்வுவளமையர்அலைபேசி எண் : +919444443035 (அச்சுப்புத்தகம், ஓலைச்சுவடிகள், செப்பேடுகள், அரியகாகிதச்சுவடிகள், ஒளி-ஒலி ஆவணங்கள்)

விக்கிப்பீடியா பயிலரங்கம் – சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி – திருநெல்வேலி

நாள் – 01,02 மார்ச்சு 2024 கல்லூரி ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி விக்கிப்பீடியா பயிலரங்கம் – சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி – திருநெல்வேலி விவரங்கள் படங்களில் காண்க.

மின்னூல் உருவாக்கம் – தன்னார்வலர்கள் தேவை

FreeTamilEbooks.com தளத்தில் மின்னூல்களை வெளியிட, தன்னார்வலர்கள் தேவை. கணினி பயிற்சி, இணைய வசதி இருக்க வேண்டும்.அட்டைப்படங்கள் வரைய ஆர்வம் இருத்தல் இனிது. மின்னூலாக்கம், அட்டைப்படம் உருவாக்கத்துக்குத் தேவையான பயிற்சிகள் வழங்குவோம். பின் வரும் காணொளிகளை பார்க்கவும். மேற்கண்ட காணொளிகள் வழியே மின்னூல், அட்டைப்படங்கள் உருவாக்க வழிகளை விளக்கியுள்ளோம். அவற்றைக் கண்டு ஏதேனும் ஐயம் எனில் எங்களுக்கு எழுதவும். ஒரு வாரத்துக்கு ஓரிரு மணி நேரங்கள் தந்தால் போதுமானது. மின்னூலாக்கப் பணிகளுக்கு பங்களிக்க ஆர்வமுள்ளோர் தொடர்பு கொள்கKaniyamFoundation@gmail.com

கடலூர் குனு லினக்ஸ்‌ பயனர் குழுவின் 3 ஆண்டுகள் நிறைவு விழா

கடலூர் குனு லினக்ஸ்‌ பயனர் குழுவின் 3 ஆண்டுகள் நிறைவு பெற்று 4ம் ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்கிறது. இதனை வரும் ஞாயிறு காலை முதல் மதியம் வரை கொண்டாட‌ உள்ளோம். முக்கியமாக இந்நிகழ்வில் கடலூர் பகுதியை OpenStreetMap-ல் கூட்டாக தமிழாக்கம் செய்ய உள்ளோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்!

பல்லூடக அகராதி உருவாக்கப் பயிலரங்கம்

தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூரில் பல்லூடக அகராதி உருவாக்கப் பயிலரங்கம் நடைபெறுகிறது. நாள்: 26, 27-02-2024 அகராதியியல் துறை தமிழ்ப் பல்கலைக்கழகம் இடம் : வளர்தமிழ்ப்புலக் கருத்தரங்க அறை

[KanchiLUG] வாராந்திர கலந்துரையாடல் – டிசம்பர் 04, 2022

அனைவருக்கும் வணக்கம்,இந்த வாரம் KanchiLUG இல், ஞாயிற்றுக்கிழமை, பெப்ரவரி 25, 2024 16:00 – 17:00 IST அன்று ஆன்லைன் சந்திப்பாக வாராந்திர கலந்துரையாடலைத் திட்டமிட்டுள்ளோம். சந்திப்பு இணைப்பு: meet.jit.si/KanchiLugWeeklyDiscussion இந்த வாராந்திர கலந்துரையாடல் ஒரு புதிய முயற்சியாகும், இது லினக்ஸ் மற்றும் FOSS உலகில் நடக்கும் விஷயங்களைப் பற்றி மிகவும் நட்புரீதியான விவாதங்களை உருவாக்கத் தொடங்கியது. வாராந்திர கலந்துரையாடல் என்பது ஒரு திறந்த மற்றும் நட்புரீதியான கலந்துரையாடலாகும், இதில் லினக்ஸ்/FOSS தொழில்நுட்பங்கள் தொடர்பான தலைப்புகள் விவாதிக்கப்படும்.… Read More »

பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த் துறை, தமிழ் விக்கிப்பீடியாவுடன் இணைந்து நடத்தும் கல்வியாளர்களுக்கான தமிழ் விக்கிப்பீடியாப் பயிலரங்கம்

பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த் துறை, தமிழ் விக்கிப்பீடியாவுடன் இணைந்து நடத்தும் கல்வியாளர்களுக்கான தமிழ் விக்கிப்பீடியாப் பயிலரங்கம்  மார்ச் 1, 2 – 2024 நாடகளில் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் நடக்கிறது. அனைத்துத் துறை சார்ந்த பேராசிரியர்களும் பங்கேற்கலாம். பதிவுக் கட்டணம் ஏதுமில்லை. பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறையும் தமிழ் விக்கிப்பீடியாவும் இணைந்து கல்லூரிக் கலையரங்கில் கல்வியாளர்களுக்கான விக்கிப்பீடியா குறித்த பயிற்சியினை 01.03.2024, 02.03.2024 ஆகிய இரு நாட்கள் நடத்துகின்றன. தமிழ், ஆங்கிலம்,… Read More »

கணியம் அறக்கட்டளை சனவரி 2023 – பெப்ரவரி 2024

Report in Tamil Report in English கணியம் அறக்கட்டளை சனவரி 2023 – பெப்ரவரி 2024 தொலை நோக்கு தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல் பணி இலக்கு அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும். நிகழ்ச்சிகள் செயல்கள் எண் செயல்கள் மொத்தம்… Read More »

நூலக நிறுவனத்தினால் நிகழ்த்தப்படும் இணைய வழி நிகழ்ச்சி – சுவாமி விபுலானந்தரும் ஆவணப்படுத்தலின் தேவைப்பாடும்

நூலக நிறுவனத்தினால் நிகழ்த்தப்படும் இணைய வழி நிகழ்ச்சித் தொடர் வரிசையில் 75 வது நிகழ்வாக ‘சுவாமி விபுலானந்தரும் ஆவணப்படுத்தலின் தேவைப்பாடும்’ எனும் தலைப்பிலான கலந்துரையாடல் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இக்கலந்துரையாடல் சேகர வரிசையில் பதினான்காவதாக அமைகின்றது. இக்கலந்துரையாடலை விபுலமாமணி தேசமான்ய வி.ரி. சகாதேவராஜா அவர்கள் நிகழ்த்தவுள்ளார். இக்கலந்துரையாடலில் இணைந்து பயனடையுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். திகதி- 24.02.2024 சனிக்கிழமைநேரம்- 7.30 p.m. (இலங்கை நேரம்)இணைப்பு – us02web.zoom.us/j/81415584070