Author Archives: கணியம் பொறுப்பாசிரியர்

Big Data – ஓர் அறிமுகம்

source – commons.wikimedia.org/wiki/File:BigData_2267x1146_white.png நமது ஊரில் உள்ள பழக்கப்பட்ட மளிகைக் கடைக்குச் சென்று பொருட்கள் வாங்கும்போது, அந்தக் கடைக்காரருக்கு நம்மைப் பற்றிய விவரம் முழுவதும் தெரிந்திருக்கும். மேலும் அவர் நம்முடன் கொண்ட பழக்கத்தினால் நமக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது என்பதை சற்று கணித்து வைத்திருப்பார். எனவே நமது ரசனைக்கேற்ப அவரிடம் ஏதேனும் புது சரக்குகள் வந்து இறங்கியிருப்பின், அதனை நம்மிடம் காட்டி ‘இது உங்களுக்கு மிகவும் பிடிக்கும். பயன்படுத்தித்தான் பாருங்களேன்” என்பார். நாமும் “சரி! வாங்கித்தான்… Read More »

சென்னை விக்கி நிரல் திருவிழா, சூலை 23 2017

வரும் ஞாயிறு அன்று சென்னை லினக்சு பயனர் குழு நடத்தும் விக்கி நிரல் திருவிழாவில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம். இடம் Hexolabs Interactive Tech Pvt Ltd, Type II/17, Dr.VSI Estate, திருவான்மியூர், சென்னை 41. தொலைபேசி – 044 42169699 NIFT அருகில், Origin Towers எதிரில். நேரம் ஞாயிறு 23.07.2017 காலை 10.00 முதல் மாலை 5 வரை.   அவசியமானவை மடிக்கணினி கொண்டுவருதல் அவசியம். குறைவான இணைய இணைப்பே இருப்பதால்,… Read More »

தமிழுக்கான கட்டற்ற மென்பொருட்கள் – நிரல் திருவிழா – ஏப்ரல் 23 – சென்னை

நீங்கள் கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்கத்தில் பங்கு பெற விரும்புகிறீர்களா? தமிழுக்கு உங்கள் நிரலாக்கத் திறன் மூலம் ஏதேனும் பங்களிக்க ஆர்வமுண்டா? பிற கட்டற்ற மென்பொருள் பங்களிப்பாளர்களை சந்திக்க வேண்டுமா? இதோ ஒரு வாய்ப்பு. தமிழுக்கான கட்டற்ற மென்பொருட்கள் – நிரல் திருவிழா நாள் – ஏப்ரல் 23, 2017, ஞாயிறு நேரம் – காலை 10.00 – மாலை 5.00 இடம் – மணவை முஸ்தபா நினைவகம், அறிவியல் தமிழாய்வு அரங்கு, A E 103, 6வது… Read More »

ராஸ்பெர்ரி பை – கையடக்கக் கணிப்பொறி

Image : commons.wikimedia.org/wiki/File:Pre-release_Raspberry_Pi.jpg CC-By-SA ராஸ்பெர்ரி பை என்பது ஒரு மினி கையடக்கக் கணிப்பொறியாகும், இது முக்கியமாக மாணவர்கள் எளிதாக கணினி அறிவியலை கற்றுக் கொள்ளும் பொருட்டு லண்டனில் உள்ள ஒரு நிறுவனம் உருவாக்கியது. விலையும் மலிவாக இருப்பதால் வாங்கி உபயோகிப்பதற்கு எளிதாக இருக்கிறது(2800 ரூபாய்), நாம் சாதாரண கணினிகளில் செய்யக் கூடிய வேலைகளை இதிலும் செய்ய முடிகிறது, இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இக்கணினியின் மூலம் நம்முடைய வீட்டிலிருக்கும் எலக்ரிக்கல் மற்றும் எலக்ரானிக்ஸ் பொருட்களை இயக்கவும் நிறுத்தவும்… Read More »

மின்னூல் – எளிய தமிழில் WordPress – தமிழ்

எளிய தமிழில் WordPress முதல் பதிப்பு அக்டோபர் 2016 பதிப்புரிமம் © 2016 கணியம். ஆசிரியர் – தமிழ் – iamthamizh@gmail.com பிழை திருத்தம்: த.சீனிவாசன் – tshrinivasan@gmail.com வடிவமைப்பு , மின்னூலாக்கம் – பிரசன்னா udpmprasanna@gmail.com அட்டைப்படம் – லெனின் குருசாமி – guruleninn@gmail.com இந்த நூல் கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிடப்படுகிறது . இதன் மூலம், நீங்கள் யாருடனும் பகிர்ந்து கொள்ளலாம்.  திருத்தி எழுதி வெளியிடலாம். வணிக ரீதியிலும்யன்படுத்தலாம். ஆனால்,  மூலப் புத்தகம், ஆசிரியர் மற்றும் www.kaniyam.comRead More »

எளிய தமிழில் Selenium – மின்னூல்

மென்பொருள் சோதனைத் துறையில், கட்டற்ற மென்பொருளான Selenium பெருமளவில் பயன்படுத்தப் படுகிறது. பெருகி வரும் இணைய தளங்களை தானியக்கமாக சோதிக்க இதைப் பயன்படுத்தலாம். இதை, இந்த நூல் எளிமையாக அறிமுகம் செய்கிறது. தமிழில் கட்டற்ற மென்பொருட்கள் பற்றிய தகவல்களை “கணியம்” மின் மாத இதழ், 2012 முதல் வெளியிட்டு  வருகிறது.இதில் வெளியான Selenium பற்றிய கட்டுரைகளை இணைத்து ஒரு முழு புத்தகமாக வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம். உங்கள் கருத்துகளையும், பிழை திருத்தங்களையும் editor@kaniyam.com க்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.… Read More »

Selenium – சோதனைகளை இணைத்து இயக்குதல், அறிக்கைகள்

3.6 தனித்தனி சோதனைகளை ஒன்றாக இணைத்து இயக்குதல் search_tests (3.4) மற்றும் homepage_tests (3.5) எனும் இரண்டு வெவ்வேறு program-களில் கொடுக்கப்பட்டுள்ள சோதனைகளை ஒருசேர நிகழ்த்த விரும்பினால் அதற்கான code பின்வருமாறு அமையும்.     இதில் தேவையான கோப்புகளிலிருந்து அதிலுள்ள classes-ன் பெயர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பதைக் காணலாம். பின்னர் அந்த classes-ல் உள்ளவை  அனைத்தும் x , yஎனும் variables-க்கு செலுத்தப்பட்டுள்ளது. Z எனும் variable-ஆனது x மற்றும் y-ஐ இணைத்த ஒரு TestSuit-ஐத் தாங்கியுள்ளது.… Read More »

எளிய தமிழில் PHP – மின்னூல்

PHP இணைய தளங்களை அட்டகாசமான வசதிகளோடு உருவாக்கும் ஒரு சிறந்த, ஆனால் மிக எளிய நுட்பம். விக்கிப்பீடியா, வேர்டுபிரஸ் போன்ற பல முக்கிய வலைத்தளங்கள் இந்த மொழியிலேயே உருவாக்கப் பட்டுள்ளன. இதை, இந்த நூல் எளிமையாக அறிமுகம் செய்கிறது. தமிழில் கட்டற்ற மென்பொருட்கள் பற்றிய தகவல்களை “கணியம்” மின் மாத இதழ், 2012 முதல் வெளியிட்டு  வருகிறது.இதில் வெளியான PHP பற்றிய கட்டுரைகளை இணைத்து ஒரு முழு புத்தகமாக வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம். உங்கள் கருத்துகளையும், பிழை… Read More »

மென்பொருள் உருவாக்கும் விந்தையுலகம் 15: மொய்திரளில் வேலையின் அளவை மதிப்பீடு செய்வது இன்னொரு வகையான சூதாட்டமா?

Agile/Scrum பற்றி தொடர் கட்டுரை – 15 மொய்திரள் (Scrum) செயல்முறையின் சக படைப்பாளரான ஜெஃப் சதர்லேண்ட் (Jeff Sutherland) கூறுகிறார், “நான் OpenView Venture Partners கூட வேலை செய்த பொழுது அவர்கள் எந்த ஒரு இயக்குநர் குழுமம் கூட்டத்திலும் சரியான கான்ட் விளக்கப்படம் பார்த்ததில்லை என்று கூறுவர். தங்கள் அணிகளின் உற்பத்தி திசைவேகம் என்ன என்றே தெரியாமல் இன்ன தேதியில் வெளியீடு செய்ய முடியும் என்று வாக்குறுதி அளிப்பதுதான் இத்திட்டங்களின் தோல்விக்கு மூல காரணம்.… Read More »

PHP தமிழில் – 23 – முடிவுரை

PHP பற்றிய அடிப்படை செய்திகளை மட்டும் இங்கு பார்த்துள்ளோம். நல்ல கைதேர்ந்த PHP Developer ஆக ஆகவேண்டுமென்றால் PHP அடிப்படைகளைத் தாண்டி நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். அதுமட்டுமில்லாமல் HTML, CSS, JQUERY, JAVA SCRIPT, MY SQL போன்றவைகளையும் அவசியம் கற்க வேண்டும். jQuery, Java Script போன்றவைகளைத் தவிர HTML, CSS, MY SQL போன்ற தொழில்நுட்பங்களை நீங்கள் கணியம் மூலமாகவே கற்றுக்கொள்ளலாம். இவைகளனைத்தும் கணியம் தளத்திலே மின்னூலாகவே கிடைக்கின்றன. மிக எளிமையாக தமிழிலேயே… Read More »