Author Archives: கணியம் பொறுப்பாசிரியர்

எல்லா கணிணிகளும் இனி உங்கள் வசம் – Ansible – பாகம் 5 – நிறைவுப் பகுதி

Tasks: மேற்கண்ட அனைத்தையும் பல்வேறு தொடர்ந்த செயல்பாடுகளின் தொகுப்பாக Task என்று வரையறுக்கலாம். கோப்பு – tasks/main.yml — – name: Add Nginx Repository apt_repository: repo=’ppa:nginx/stable’ state=present register: ppastable – name: Install Nginx apt: pkg=nginx state=installed update_cache=true when: ppastable|success register: nginxinstalled notify: – Start Nginx – name: Add H5BP Config when: nginxinstalled|success copy: src=h5bp dest=/etc/nginx owner=root group=root – name: Disable… Read More »

மென்பொருள் உருவாக்கும் விந்தையுலகம் 6: மென்பொருள் திட்டம் நிர்வகிக்க, போர் விமானத்தை தரையிறக்கப் பழகுங்கள்!

Agile/Scrum பற்றி தொடர் கட்டுரை – 6 புதிய உற்பத்திப்பொருட்கள் கண்டுபிடிக்கும் ஒரு குழு எந்த மாதிரி அணுகுமுறை பயன்படுத்தலாம் என்று 1986-ல் டாகெயூச்சி மற்றும் நோனாகா ஒரு ஆய்வுக் கட்டுரை எழுதினர். வாகனம், நகலி மற்றும் அச்சுப்பொறி தயாரிப்பு நிறுவனங்களில் செய்த நேர் ஆய்வுகளின் அடிப்படையில் இதை எழுதினர். வழக்கமாகச் செய்யும் தொடர்நிலை அணுகுமுறைக்குப் பதிலாக Scrum* அணுகுமுறை இம்மாதிரி வேலைக்கு திறம்பட்டதாக இருக்கும் என்பது அவர்கள் பரிந்துரை. ரக்பி (Rugby) கால்பந்தாட்டத்தில் ஏதும் சிறிய… Read More »

மென்பொருள் உருவாக்கும் விந்தையுலகம் 5: ஆவணங்களைக் குறைத்து மென்பொருளை தேவைக்குத் தக அமைப்பதை எளிதாக்குங்கள்!

Agile/Scrum பற்றி தொடர் கட்டுரை – 5 ஒருவேளை நீங்கள் அரசியல் கட்சிகள் மட்டும்தான் கொள்கை விளக்க அறிக்கைகளை தேர்தல் நேரத்தில் வெளியிடுவார்கள் என்று நினைத்தீர்களா என்ன? 2001-ம் ஆண்டு குளிர்காலத்தில் யூடா மாகாணத்தின் ஸ்னோபேர்ட் பனிச்சறுக்கு மையத்தில் 17 மென்பொருள் உருவாக்குபவர்கள் கூடினர். இவர்கள் யாவரும் வெவ்வேறு மென்பொருள் செயல்முறைகளை (Extreme Programming or XP, Scrum, DSDM, Adaptive Software Development, Crystal, Feature-Driven Development, Pragmatic Programming, and others) உருவாக்கி ஊக்குவித்து… Read More »

மென்பொருள் உருவாக்கும் விந்தையுலகம் 4: திட்டம் 40% முடிந்தும் நிரல் ஒரு வரி கூட இல்லை ஆனால் ஆவணங்களோ ஒரு அடுக்கு!

  Agile/Scrum பற்றி தொடர் கட்டுரை – 4   நான் அப்போது அமெரிக்காவில் ஒரு மத்திய அரசாங்கத் துறையில் ஆலோசகராக இருந்தேன். கூடிப்பேச சென்றிருந்த திட்ட இயக்குனர் அப்பொழுதுதான் திரும்பி வந்திருந்தார், அதிர்ச்சியுடன் காணப்பட்டார். அந்த நிகழ்ச்சியில் நடந்தது பற்றி யாரிடமாவது சொல்லா விட்டால் மண்டை வெடித்து விடும் நிலையில் இருந்தார். ஒப்பந்தக்காரர்கள் உருவாக்கிய மென்பொருளைக் காட்டி, விளக்கி, கொண்டு சேர்க்க வந்திருந்தனராம். ஒப்பந்தத்திலுள்ள தேவைப் பட்டியல்படி மூன்று ஆண்டுகளாகக் கடுமையாக உழைத்து உருவாக்கியதென்று கூறினார்களாம்.… Read More »

சாப்ட்வேர் டெஸ்டிங் -7 – திட்டமிடல்

சாப்ட்வேர் டெஸ்டிங் – திட்டமிடல் வாடிக்கையாளர் தேவைகள் பற்றிப் போதுமான விவரங்களைச் சேர்த்த பிறகு, மென்பொருள் நிறுவனம் செய்ய வேண்டிய அடுத்த வேலை – வேலையைத் திட்டமிடுவது. திட்டமிடல் என்றால் என்ன? எளிதான விசயம் தான்! 1) யார் யார் என்னென்ன வேலை செய்வது? 2) எப்போது செய்வது? 3) எப்படிச் செய்வது? என்று திட்டமிடுவதைத் தான் திட்டமிடல் (‘Planning’) என்று சொல்கிறார்கள். இதில் யார் யார் என்னென்ன வேலையைச் செய்வது, என்று திட்டமிடும் போது ஊழியர்… Read More »

மென்பொருள் உருவாக்கும் விந்தையுலகம் 3: எருமை மாட்டைத் தண்ணீரில் போட்டு விலை பேசுவது போல!

Agile/Scrum பற்றி தொடர் கட்டுரை – 3   என் தந்தை ஒரு நெற்பயிர் விவசாயி. ஏதாவது முழுப் பரிமாணம் தெரியாத விஷயங்களைப் பற்றிப் பேசும்போது, “எருமை மாட்டைத் தண்ணீரில் போட்டு விலை பேசுவது போல” என்று உபமானம் கூறுவார். பெரும்பாலான மென்பொருள் மதிப்பீடும், பேரப் பேச்சும் எருமை மாட்டைத் தண்ணீரில் போட்டு விலை பேசுவது போலத்தான் நடக்கிறது. நீங்கள் ஒரு விற்பனையாளராக இருந்தால் அந்த திட்டத்தை மதிப்பீடு செய்தால்தான் நீங்கள் ஒரு விலை சொல்ல முடியும்.… Read More »

மென்பொருள் உருவாக்கும் விந்தையுலகம் 2: மென்பொருள் தேவைகள் தெரிவது என்பது மூடுபனியில் நடப்பது போன்றது!

Agile/Scrum பற்றி தொடர் கட்டுரை – 2   பொதுவாக ஒரு மென்பொருள் உருவாக்கும் திட்டத்தில் பின்வரும் முக்கிய கட்டங்கள் உண்டு: தேவைப்பட்டியல் திரட்டுதல் வடிவமைத்தல் நிரலாக்கல் சோதித்தல் நிறுவுதல்   மென்பொருள் திட்டங்களில் பிரச்சினை முதல் கட்டத்திலேயே தொடங்குகிறது. முதல் கோணல் முற்றிலும் கோணல் என்ற பழமொழி இதற்கு முற்றிலும் பொருந்தும்.   கணினி தகவல் அமைப்புகள் இதழில் வெளியான ஆராய்ச்சியின்படி 90% பெரிய மென்பொருள் திட்டங்களில் தோல்விக்கு மூலகாரணம் மோசமான தேவைகள் பட்டியல் திரட்டுதல்தான்.… Read More »

மென்பொருள் உருவாக்கும் விந்தையுலகம் 1: மென்பொருள் திட்டங்கள் பாதிக்கு மேல் படுதோல்வி அடைகின்றன!

Agile/Scrum பற்றி தொடர் கட்டுரை – 1 நீங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் அமெரிக்காவில் ஒபாமா கேர் மருத்துவக் காப்பீடு திட்டத்தை செயல்படுத்துவதில் வந்த பிரச்சினைகள் பற்றி செய்திகள் பார்த்திருக்கக்கூடும். இத்திட்டத்தின்படி அமெரிக்காவில் குறைந்த வருமானம் உள்ள குடும்பங்கள் HealthCare.gov என்ற இணையதளத்தில் பதிவு செய்து தனியார் மருத்துவக் காப்பீடுகளை ஒப்பிட்டு, தேர்வுசெய்து வாங்கவும் மற்றும் அதற்கான அரசாங்க மானியம் பெறவும் இயலும். இந்த திட்டத்துக்கு ஆன மொத்த செலவு ரூபாய் 10,000 கோடி.   பிரச்சினைகள்… Read More »

சாப்ட்வேர் டெஸ்டிங் 6 – சாப்ட்வேர் எங்கு தொடங்குகிறது?

முந்தைய பதிவில் நாம் பார்த்த நகைக்கடைக்கு இணையத்தளம் என்னும் எடுத்துக்காட்டின் அடிப்படையில் இதைக் கொஞ்சம் பார்ப்போம்! முந்தைய பதிவைப் படிக்காதவர்கள் தயவுசெய்து அதைப் படித்து விட்டு இப்பதிவிற்கு வாருங்கள்! இதைப் பார்ப்பதற்கு முன்னர் அறிவொளியின் மகள் தமிழினியின் திருமணம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோமே! அந்தப் பேச்சை முடித்து விடுவோமே! தமிழினியின் திருமணத்திற்குச் சமையல் வேலை செய்ய ஆள் தேடிக் கொண்டிருந்தோமே! நினைவிருக்கிறதா? ஒவ்வொரு சமையல்காரரும் வந்து, எந்தத் தேதியில், எத்தனை பேருக்கு, என்னென்ன, எத்தனை வேளைகள் , எவ்வளவு… Read More »

கணித்தமிழ் வளர்ச்சியில் கட்டற்ற மென்பொருட்கள்

கணித்தமிழ் வளர்ச்சியில் கட்டற்ற மென்பொருட்கள் த.சீனிவாசன் tshrinivasan@gmail.com ஆங்கிலேயர் உருவாக்கிய கணிணியின் திரைகளில் 1990 களில் தமிழ் எழுத்துக்களைக் காட்டுவதற்கே பலரும் பல வகைகளில் பெரிதும் முயற்சி செய்தனர். பின் எழுத்துருக்கள், குறிமுறைகள், விசைப்பலகைகள் எனப்பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒருங்குறியின் வருகை தமிழை அனைத்து கணிணிகளிலும் கருவிகளிலும் காட்டுவதற்கு உதவியது. இது கணித்தமிழ் வளர்ச்சியின் முதல் நிலையே. இதுவே எழுத்துணரி (OCR), பேச்சு உணரி (Speech to Text), எழுத்து ஒலி மாற்றம் (Text to Speech),… Read More »