Author Archives: கணியம் பொறுப்பாசிரியர்

எளிய, இனிய கணிணி மொழி – ரூபி – 1 – நிறுவுதல்

  ரூபியின் வரலாறு: ரூபி ஒரு எளிமையாக புரிந்துகொள்ளக்கூடிய object oriented programming language. 1993, ஜப்பானில் , Yukihiro Matsumoto என்பவரால் ரூபி உருவாக்கப்பட்டது. அவரை அன்பாக Matz என்றும் அழைப்பர்.1995-ல் ரூபி matz-ஆல் தனது நாடான ஜப்பானின் அறிமுகப்படுத்தப்பட்டது. 2000 ஆண்டு தொடக்கத்தில் அனைத்து நாடுகளில் உள்ள programming உலகத்தவரால் சிறந்த object oriented programming language ஆக அங்கீகரிக்கப்பட்டது. ரூபி என்றால் என்ன? ரூபி ஒரு object oriented interpreted scripting language.… Read More »

சாப்ட்வேர் டெஸ்டிங் 4 – இணைய வழி இயங்கும் மென்பொருள் சோதனைகள்

  என்ன இது? தலைப்பே புரியவில்லை என்று தோன்றுகிறதா? கவலைப்படாதீர்கள்! புரியும்படிப் பார்த்து விடலாம்! இணையம் இல்லாமல் எந்தெந்த மென்பொருள்கள் (சாப்ட்வேர்) எல்லாம் இயங்காதோ, அவையெல்லாம் இணைய வழி இயங்கும் மென்பொருள்கள் தாம்! அப்படியானால், கணியம்.காம் என்பது இணையவழி இயங்கும் மென்பொருள் – சரிதானா என்கிறீர்களா? நூற்றுக்கு நூறு சரிதான்!   ஓர் இணையத்தளத்தையோ, வலைப்பூவையோ சோதிக்க வேண்டுமானால் அடிப்படையில் எதையெல்லாம் கவனம் எடுத்துப் பார்க்க வேண்டும் – அவற்றைத் தான் இப்போது பார்க்கப் போகிறோம்.  … Read More »

எல்லா கணிணிகளும் இனி உங்கள் வசம் – Ansible – பாகம் 3

Modules: பல்வேறு பணிகளைச் செய்ய, Ansible ஆனது Modules களைப் பயன்படுத்துகிறது. Module மூலம் மென்பொருள் நிறுவுதல், கோப்புகளை நகல் எடுத்தல், உருவாக்குதல், திருத்துதல் என Commandline ல் நாம் செய்யும் எதையும் செய்யலாம். நேரடியாக command மூலம் செய்யாமல், அவற்றுக்கான module மூலம் செய்தால், பலன்கள் அதிகம். இந்த Module கள், ansible ன் முதலில் பெற்ற Facts, உண்மைகளைப் பொறுத்து, தாமாக தம் செயல்களை மாற்றிக் கொள்கின்றன. Module இல்லாமலும் நேரடியாகக் கட்டளைகளை இயக்கலாம்.… Read More »

சாப்ட்வேர் டெஸ்டிங் -2 – தரம் என்றால் என்ன?

தரம் என்றால் என்ன என்னும் கேள்வியுடன் முந்தைய பதிவை முடித்திருந்தோம்.  யோசித்துப் பார்த்தீர்களா?  தரம் என்று எதைச் சொல்வது?  விலை அதிகமாக உள்ள ஒரு பொருளைத் தரமானது என்று சொல்லலாமா?  பொது நிலையில் அது சரி என்று தோன்றினாலும் உண்மை அதுவாக இருக்காது.  விலை அதிகம் என்பதோடு தரமும் இல்லாத பொருட்கள் ஏராளம் சந்தையில் கிடைக்கின்றன.  சரி!  குறைந்த விலையில் கிடைக்கும் பொருட்கள் தரமற்றவை என்று சொல்ல முடியுமா?  அப்படியும் வரையறுத்துச் சொல்ல முடியாது. ஏனென்றால், தரமான… Read More »

சாப்ட்வேர் டெஸ்டிங் என்றால் என்ன? – 1

சாப்ட்வேர்  டெஸ்டிங்  என்றால்  என்ன? சாப்ட்வேர் டெஸ்டிங் என்பதைப் பார்ப்பதற்கு முன்னர் ‘டெஸ்டிங்’ என்றால் என்ன என்று பார்த்து விடுவோம்.  ‘டெஸ்டிங்’ என்றால் என்ன?  சோதிப்பது, ஆய்ந்து பார்ப்பது என்று சொல்லலாம்.  சோதிப்பது என்றால் எதைச் சோதிப்பது?  பள்ளிக்கூடத்தில் ‘டெஸ்ட்’ (தேர்வு) என்று வைக்கிறார்கள்.  அங்கே என்ன சோதிக்கிறார்கள்?  ஆசிரியர் கற்றுக்கொடுத்த பாடம் முழுவதும் மாணவர்களைப் போய்ச் சேர்ந்திருக்கிறதா என்று சோதிக்கிறார்கள்.  அந்தச் சோதனைக்கு மொத்தம் நூறு மதிப்பெண் வைத்துக்கொள்கிறார்கள்.  அதில் நூற்றுக்கு மாணவர்கள் எவ்வளவு மதிப்பெண்… Read More »

எல்லா கணிணிகளும் இனி உங்கள் வசம் – Ansible – பாகம் 2

Ansible இயங்கும் முறை hosts என்ற ஒரு கோப்பில், நாம் நிர்வகிக்க விரும்பும் கணிணிகளின் பெயர்கள் அல்லது IP முகவரிகள், அவற்றுக்கான username,  keyfile போன்றவற்றை எழுதுவோம். வேறு ஒரு கோப்பில், அந்தக் கணிணிகளில் நாம் செய்ய விரும்பும் பணிகளை, அவற்றுக்கான Module களின் துணை கொண்டு எழுதுவோம். இந்தக் கோப்பு YAML என்றஅமைப்பில் இருக்க வேண்டும். இது Playbook என்று அழைக்கப்படும். Ansible ஆனது இந்த Playbookல் உள்ளவற்றைப் படித்து, hosts ல் உள்ள ஒவ்வொரு… Read More »

எல்லா கணிணிகளும் இனி உங்கள் வசம் – Ansible – பாகம் 1

fr.wikipedia.org/wiki/Fichier:Ansible_logo.png   Ansible அறிமுகம் உங்களிடம் ஒரு லினக்ஸ் சர்வர் உள்ளது. இதில் இன்று நீங்கள் 8 மென்பொருட்களை நிறுவ வேண்டும். 15 மென்பொருட்களை மேம்படுத்த வேண்டும். 2 மென்பொருட்களை நீக்க வேண்டும். எப்படிச் செய்வீர்கள்? அவற்றுக்கான கட்டளைகளை ஒன்றன் பின் ஒன்றாகத்தான் தருவீர்கள்.சரிதானே. இதே வேலையை 5 சர்வர்களில் செய்ய வேண்டும் என்றால்? ஒவ்வொரு சர்வராக login செய்து எல்லாக் கட்டளைகளையும் இயக்க வேண்டியதுதான். இதுவே 50 சர்வர், 100 சர்வர் என்றால்? ஒவ்வொன்றிலும் login… Read More »

கட்டற்ற மென்பொருள் – மின்னூல் – ம. ஸ்ரீ. ராமதாஸ்

கட்டற்ற மென்பொருள் ரிச்சர்டு எம். ஸ்டால்மன் தமிழாக்கம் – ம. ஸ்ரீ. ராமதாஸ்   உரிமை  Creative Commons Attribution-NoDerivs 3.0 United States License உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். மின்னூலாக்கம் – த.சீனிவாசன் tshrinivasan@gmail.com நூல் தட்டச்சு உதவி – குனு அன்வர் – gnukick@gmail.com     முன்னுரை நான் பதினோறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்ததாக ஞாபகம். கணினி அறிவியல் பாடத்தின் தனியே பயிலகம் ஒன்றை நடத்திக் கொண்டிருநத்ார்.… Read More »

எளிய தமிழில் MySQL – பாகம் 2 – மின்னூல்

தமிழில் கட்டற்ற மென்பொருட்கள் பற்றிய தகவல்களை “கணியம்” மின் மாத இதழ், 2012 முதல் வெளியிட்டு  வருகிறது. இதில் வெளியான எளிய தமிழில் MySQL என்ற மின்னூலின் பலத்த வரவேற்பை அடுத்து வாசகர்கள் நூலாசிரியருக்கு மின்னஞ்சலில் கேட்ட கேள்விகளைக்கு அளித்த பதில்களை, கணியம் இதழில் “Advanced MySQL” என்று பல கட்டுரைகளாக வெளியிட்டோம். அந்தக் கட்டுரைககளை இணைத்து ஒரு முழு புத்தகமாக வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம். உங்கள் கருத்துகளையும், பிழை திருத்தங்களையும் editor@kaniyam.com க்கு மின்னஞ்சல்… Read More »

Advanced MySQL – Triggers

Trigger என்பது Table அளவில் சில வேலைகளைத் தானியக்கமாக செய்யப் பயன்படுத்தப்படுகிறது. அதாவது table ல் தகவல்கள் செலுத்தப்படும்போதோ, தகவல்கள் மாற்றப்படும்போதோ அல்லது நீக்கப் படும் போதோ நமக்கு வேண்டியவாறு வேறு சில வேலைகளையும் சேர்த்து செய்ய வைக்கலாம். இதற்கு Trigger பயன்படுகிறது. இதுவும் Stored Procedure போலத்தான். ஆனால் Trigger ஆனது குறிப்பிட்ட நிகழ்வின்போது தானாக அழைக்கப்படுகிறது. ஆனால் Stored Procedure ஐ தேவைப்படும் போது, நாம்தான் அழைக்கவேண்டும். தகவலை சேமிப்பதற்கு முன்னே சரிபார்க்கவும், Table… Read More »