Author Archives: கணியம் பொறுப்பாசிரியர்

லிப்ரெஓபிஸ் 4.3 – வெளியீட்டு நிகழ்வு

உலகின் தலைசிறந்த அலுவலகத் தொகுதிகளில் ஒன்றான லிப்ரெஓபிஸ் 4.3 , மற்றும் அதன் தமிழ்ப் பதிப்பு இம்மாதம் 3 ஆம் தேடி வெளியிடப்பட்டது . அதன் வெளியீடு ஒட்டி தமிழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வில் பங்கெடுத்து நிகழ்வைச் சிறப்பிக்குமாறு தங்களைத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். தேதி : 14 ஆகஸ்ட் 2014 நேரம் : மாலை 4:30 மணி முதல் 6.30 மனி வரை இடம் : தமிழ் இணையக் கல்விக்கழகம் ,கோட்டூர்புரம் ,சென்னை . ஏற்பாடு :… Read More »

லிப்ரெஓபிஸ் 4.3: இன்று, அதினும் சிறந்த அலுவலகத் தொகுதி இல்லை

கோலாலம்பூர், ஆகஸ்ட் 3, 2014 இன்று தமிழா! குழுவினர் லிப்ரெஓபிஸ் 4.3 இன் வெளியீட்டை அறிவித்தனர். உலகெங்கிலும் பரவிக் கிடக்கும் பல்லாயிரக்கணக்கான தன்னார்வலர்களின் உடனுழைப்பில் கடந்த நான்கு ஆண்டுகளாக மேம்படுத்தப்பட்டு வந்த லிப்ரெஓபிஸ், இன்று எல்லாவிதத் தேவைகளையும் நிறைவு செய்யும் ஒரு மிகச் சிறந்த அலுவலகத் தொகுதியாக வளர்ந்திருக்கிறது. ‘லிப்ரெ’ என்றால் விடுதலை என்று பொருள்பட அமைந்துள்ள லிப்ரெஓபிஸ் ஒரு கட்டற்ற திறமூல மென்பொருள் ஆகும். அது முழுக்க முழுக்க தமிழில் அமைந்திருப்பது மட்டுமல்லாது, அனைவருக்கும் இலவசமாகவே… Read More »

விக்கிப்பீடியா:விக்கி மின்மினிகள்- பயிற்சி – # 2

இன்று, இந்த விக்கிப்பீடியாவை யார் எழுதுகிறார்கள் என்று பார்ப்போமா? தமிழ் விக்கிப்பீடியாவின் சில பங்களிப்பாளர்களை இங்கு பார்க்கலாம். உங்கள் ஊர்க்காரர்கள் யாராவது பங்களிக்கிறார்களா? அவர்களின் பங்களிப்புக்கு நன்றி தெரிவித்து ஒரு செய்தி இடலாமே? எடுத்துக்காட்டுக்கு, மலேசியாவைச் சேர்ந்த முத்துக்கிருசுணனின் பயனர் பக்கத்தைப் பாருங்கள். அங்கு மேற்பகுதியில் “உரையாடல்” என்று ஒரு இணைப்பு இருக்கும். அதனை அழுத்துங்கள். பிறகு வரும் உரையாடல் பக்கத்தில் “தலைப்பைச் சேர்” என்ற இணைப்பை அழுத்துங்கள். பிறகு, உங்கள் செய்தியை இட்டுச் சேமியுங்கள். தமிழ்… Read More »

Gcompris – கல்வி கற்க உதவும் கட்டற்ற மென்பொருள்

நமது செயல்களை எளிமையாக்க ஏராளமான மென்பொருட்கள் கிடைக்கின்றன. அவற்றை நாம் விலை கொடுத்து வாங்கினாலும், நிறுவும் போது சில கட்டுப்பாடுகளுக்கு ஒத்துக்கொள்வோம். I agree என்ற பட்டனுக்கு மேலே உள்ள உரையை யாரும் படிக்க மாட்டோம். அதில் கீழ்காணும் வகையில் சில கட்டுப்பாடுகள் இருக்கும். ‘இந்த மென்பொருளை ஒரே ஒரு கணினியில் மட்டுமே நிறுவுவேன். வேறு யாருக்கும் தரவே மாட்டேன். நிறுவனத்தின் அனைத்து கட்டுப்பாடுகளையும் ஏற்கிறேன்.’ சிறு வயதில் இருந்தே உணவு, இனிப்பு என நம்மிடம் இருக்கும்… Read More »

விக்கிப்பீடியா:விக்கி மின்மினிகள்- பயிற்சி – # 1

விக்கி மின்மினிகள் பயிற்சிக்கு வருக ! வருக ! முதல் நாளான இன்று பின்வருவனவற்றை முயன்று பாருங்களேன் ! விக்கிப்பீடியாவில் உங்களுக்கு என்று ஒரு பயனர் கணக்கு தொடங்குங்கள். கணக்கு தொடங்க இங்கு செல்லுங்கள். இப்பயனர் பெயரை அனைத்து மொழி விக்கிமீடியா திட்டங்களிலும் நீங்கள் பயன்படுத்தலாம். விக்கிப்பீடியாவுடன் பிற உறவுத் திட்டங்களைப் பற்றி அறிவீர்களா? விக்சனரி, விக்கிமூலம், விக்கி நூல்கள், விக்கி செய்திகள், விக்கி மேற்கோள் ஆகிய திட்டங்களை ஒரு முறை பார்வையிடுங்கள். விக்கிப்பீடியாவின் தேர்தெடுத்த கட்டுரைகளை… Read More »

லிப்ரெஓபிஸ் (Libre Office) முன்னேற்றம் – தமிழாக்கம்

நண்பரே, வணக்கம். கட்டற்றத் திறவுற்று மென்பொருட்களில் லிப்ரெஓபிஸ் ஒரு முக்கிய இடத்தை வகிக்கின்றது. அதனைத் தமிழாக்கும் பணியை 2011 ஆண்டு முதற்கொண்டு நாம் மெற்கொண்டு வருகின்றோம். கடந்த ஆண்டு லிப்ரெஓபிஸ் முழுமையாக தமிழாக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இவ்வாண்டு, லிப்ரெஓபிஸின் புதிய வெளியீடுகள் வெளிவந்துள்ளன. அடுத்த மாதம் 22 ஆம் திகதி லிப்ரெஓபிஸ் 4.3 வெளிவரவிருக்கிறது. அப்பதிப்பும் முழுமையாக தமிழில் இருக்க வேண்டும் என விரும்புகிறோம். இதுவரை அதன் ஒரு இலட்சம் சொற்களில் 88 ஆயிரத்தை தமிழுக்கு மொழிபெயர்த்து விட்டோம்.… Read More »

ProjectMadurai திட்டத்தின் நூல்களை கிண்டில் கருவிகளுக்காக 6 inch PDF மாற்றுதல்

ProjectMadurai.com தளத்தில் பல பழம் பெரும் இலக்கியங்கள் HTML வடிவிலும் A4 PDF வடிவிலும் வழங்கப் படுகின்றன. கிண்டில் மற்றும் பல ஆன்டிராயுடு கருவிகளில் (<=4.2.x) இன்னும் தமிழ் சரியாகத் தெரிவதில்லை. அவற்றில் தமிழ் நூல்கள் படக்க 6 அங்குல PDF கோப்புகள் பயன்படுகின்றன. GNU/Linux இயக்குதளத்தில் உள்ள கருவிகளைக் கொண்டு, Project Madurai தளத்தில் உள்ள அனைத்து நூல்களையும் 6 அங்குல PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி என்று பார்ப்போம். 1. கோப்புகளின் பெயர்களை பிரித்தெடுத்தல்.… Read More »

அழகுத் தமிழில் வண்ணப்படங்கள்

இன்று கணினி, மடிக்கணினி, அலைபேசி, கைக்கணினி எனப் பல விதங்களில் கணித்தல் தொடர்புடைய சாதனங்கள் நமக்கு கிடைக்கின்றன. அவை அனைத்தின் முகப்பையும் அழகிய வண்ணப்படங்கள் (Wall Papers) கொண்டு அலங்கரிக்கிறோம். நமது சாதனங்களை அலங்கரிப்பதற்குத் தகுந்த படங்கள் அவற்றைக் கையாளும் சுதந்திரத்துடன் (Creative Commons License) நமக்குக் கிடைத்தால் எப்படி இருக்கும்? அதுவும் தமிழில்? மேற்கண்ட நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட ஒரு சமூக வளர்ச்சித் திட்டம் தான் “Tamil Wallpapers in Creative Commons License”. அழகிய தமிழ்… Read More »

தமிழ்99 – ஸ்டிக்கர்கள் – நீங்களே அச்சடிக்கலாம்

      தமிழ்99 விசைப்பலகை தான் உலகிலேயே சிறந்த தமிழ் விசைப்பலகை.   தமிழ்99 விசைப்பலகை முறை, தமிழில் தட்டச்சு செய்வதை எளிதாக்குகிறது. இதன் சிறப்புகள் – 1. விசையழுத்தங்கள் மிகவும் குறைவு 2. இலக்கணப்படி பல இடங்களில் அதுவே மெய்யெழுத்துக்களுக்கு புள்ளியும் வைத்துக் கொள்ளும். இதனால் எழுத்துப் பிழை, இலக்கணப் பிழை இரண்டையுமே ஒழிக்கலாம். 3. பழகுவது எளிது. 4. தமிழ் எழுத்துக்களை எப்படி புரிந்து கொள்கிறோமோ அந்த வகையில தான் இது செயற்படும்… Read More »