அண்ணா பல்கலைக்கழகத்தில் மென்பொருள் விடுதலை நாள் கொண்டாட்டம்- செப்டம்பர் 22, 2012
இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ம் தேதி, டி.ஜி வைஷ்ணவ் கல்லூரியில் நடைபெற்ற மென்பொருள் விடுதலை நாள் கொண்டாட்ட நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. அதன் தொடர்ச்சியாக மீண்டும் அண்ணா பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் மாதம் 22-ம் தேதி, ஒரு மென்பொருள் விடுதலை நாள் கொண்டாட்டம் நடைபெறவிருக்கிறது. தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் நிறுவனத்தைச் (Free Software Foundation Tamil Nadu (FSFTN)) சேர்ந்த தன்னார்வலர்கள், கிண்டி பொறியியல் கல்லூரி குனு/லினக்ஸ் குழுவினருடன் இணைந்து இந்த மென்பொருள் விடுதலை நாளைக்… Read More »