கணிச்சொற் விளக்கம்
நிரல் குறிப்பிட்ட பணியினை செய்திடும் பொருட்டு கணினிக்கு இடப்பட வேண்டிய ஏவற்களின் தொகுப்பை நிரல் என்கிறோம். இதனை செய்நிரல் எனவும் வழங்குவர். நிரல் எழுதுவதை தொழிலாக கொண்டவர் நிரலாளர் ஆவார். இங்ஙனம் நிரலாக்குதற்கு பல்வேறு நிரலாக்க மொழிகள் துணை புரிகின்றன. சி, சி++, பைதான், ஜாவா, பேர்ல், ரூபி, பிஎச்பி இவற்றுள் குறிப்பிடத் தக்கவை. மென்பொருள் குறிப்பிட்ட பயனைக் கருத்திற் கொண்டு இயற்றப்படும் நிரட் கோப்புகளின் ஆவணமாக்கத்தோடு கூடிய முறையானத் தொகுப்பு மென்பொருள் ஆகும். மென்பொருட்கள்… Read More »