Author Archives: கணியம் பொறுப்பாசிரியர்

யுனிக்ஸ் (Unix) – ஒரு அறிமுகம் – காணொளி

யுனிக்சும் அதன் வரலாறும். லினக்ஸ் மற்றும் கட்டற்ற மென்பொருள் கற்க விரும்பும் ஒவ்வோருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று யுனிக்ஸ்.   இதை பற்றி தெரிந்தால்தான் கட்டற்ற மென்பொருள் என்ன என்று புரியும். வரலாறு முக்கியம் மக்கா!! தூக்கம் வந்தாலும் டீ குடிச்சிக்கிட்டே கேளுங்க. வீடியோவை வழங்கிய குழுமம்: ILUGC (ilugc.in) வீடியோவை வழங்கியவர்: மோகன் .ரா   Attribution: Unix Plate Image:

கட்டற்ற மென்பொருட்களை தமிழில் கற்க ஒரு யூடியூப்(Youtube) தளம் – Tamil Linux Community – தொடக்க விழா நிகழ்வு

    கட்டற்ற மென்பொருட்களை தமிழில் கற்க ஒரு யூடியூப்(Youtube) தளம் – தொடக்க விழா நிகழ்வு அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் வணக்கம், தமிழையும், கட்டற்ற மென்பொருளையும் நேசிக்கும் பல கட்டற்ற மென்பொருள் குழுமங்களும், அதனை சார்ந்த பல தன்னார்வலர்களும் இணைந்து கட்டற்ற மென்பொருட்களை ஒரே தளத்தில் தமிழில் கற்றுத் தெரிந்து கொள்ள தமிழர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள ஒரு கூட்டு யூடியூப் தளமே “Tamil Linux Community”(தமிழ் லினக்ஸ் கம்யூனிட்டி). Tamil Linux Community YouTube Channel Link:… Read More »

கணியம் அறக்கட்டளைக்கு ஆனந்த விகடன் டாப் 10 இளைஞர் விருது 2020 – காணொளி

ஆனந்த விகடன் டாப் 10 இளைஞர் விருது 2020 – காணொளி     விவரங்கள் இங்கே. கணியம் நண்பர்களுக்கு  பிறந்தநாள் பரிசு – ஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது     கணியம் அறக்கட்டளை நண்பர்களுக்கும், தமிழ்க்கணிமை பங்களிப்பாளர்களுக்கும், ஆனந்த விகடன் குழுமத்துக்கும் நன்றிகள்

இந்திய அளவிலான விக்கிமூலம் மெய்ப்புப் பார்க்கும் போட்டி – தமிழ் முதலிடம்

இந்திய அளவில் நடைபெற்ற விக்கிமூலம் புத்தகங்கள் மெய்ப்புப் பார்க்கும் போட்டியில் 15869 பக்கங்களை மெய்ப்புப் பார்த்து தமிழ் இரண்டாவது முறையும் முதலிடம் பிடித்தது. விக்கிமூலம் கட்டற்ற இலவச இணைய நூலகமான விக்கிமூலமும் திட்டங்களில் ஒன்று. இத்திட்டம் கட்டற்ற உள்ளடக்கம் கொண்ட மூல நூல்களின் தொகுப்பாகும். அதாவது நாட்டுடைமையாக்கப்பட்ட / பொதுக்கள உரிமங்களில் (Nationalised / Public Domain) இருக்கும் நூல்களின் தொகுப்பை இத்தளத்தில் காணலாம். ஆங்கில விக்கிமூலம் (en.wikisource.org/) 2003ல் தொடங்கப்பட்டது. நாட்டுடைமையாக்கப்பட்ட / பொதுக்கள உரிமங்களில்… Read More »

கட்டற்ற மென்பொருட்கள் – ஒரு அறிமுகம் – இணைய உரை – 24-09-2021 – மாலை 5.30 – முன்பதிவு அவசியம்

  PhyFron குழுவும் கணியம் அறக்கட்டளையும் இணைந்து வழங்கும், இணைய உரை   கட்டற்ற மென்பொருட்கள் – ஒரு அறிமுகம்   நாள் – 24 செப்டம்பர் 2021 நேரம் – மாலை 5.30 – 7.00 அவசியம் இந்த இணைப்பில் முன்பதிவு செய்க – us02web.zoom.us/meeting/register/tZ0ldOGurzwuE9R_x1tq6W61EU7UBF4Yqd9a உங்கள் மின்னஞ்சலுக்கு நிகழ்வின் இணைப்பு அனுப்பப்படும்.   தொடர்புக்கு – த.சீனிவாசன் – tshrinivasan@gmail.com – 9841795468

மின்னூல் தயாரிப்பது எப்படி? – இணைய உரை – 24-09-2021 – பிற்பகல் 12.15

  இலயோலா கல்லூரித் தமிழ்த்துறையும் கணியம் அறக்கட்டளையும் இணைந்து வழங்கும், இணைய உரை   மின்னூல் உருவாக்குவது எப்படி?   நாள் – 24 செப்டம்பர் 2021 நேரம் – 12.15 – 1.30 மதியம் இணைப்பு – meet.google.com/qpd-mxzv-dzt   தொடர்புக்கு – த.சீனிவாசன் – tshrinivasan@gmail.com – 9841795468

“அன்றாட பயன்பாட்டிற்கு கட்டற்ற மென்பொருட்கள் மற்றும் செயலிகள்” என்ற தலைப்பில் 36 மணி நேர நிரல்விழா – 18/19-09-2021 – புதுச்சேரி

நண்பர்களே, கட்டற்ற மென்பொருள் மற்றும் வன்பொருள் இயக்கம்(FSHM) இந்த வார இறுதியில் “அன்றாட பயன்பாட்டிற்கு கட்டற்ற மென்பொருட்கள் மற்றும் செயலிகள்” என்ற தலைப்பில் 36 மணி நேர நிரல்விழாவை (Hackathon) நடத்துகிறது – 18 மற்றும் 19 செப்டம்பர் 2021. உங்கள் பங்கேற்பை www.fshm.org என்ற இணையதளத்தில் பதிவு செய்யவும். இது சர்வதேச மென்பொருள் சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்படுகிறது. மென்பொருள் சுதந்திர தினத்தை கொண்டாடுவதில் இது கட்டற்ற மென்பொருள் மற்றும் வன்பொருள் இயக்கத்திற்கு… Read More »

30 ஆவது பிறந்தநாள் வாழ்த்துகள் – லினக்சு

ஆகஸ்டு 25, 1991 ல் லினஸ் டோர்வார்ட்சு பின்வரும் மின்னஞ்சலை அனுப்பினார்.   இது ஒரு மாபெரும் புரட்சியை உண்டாக்கும் என்று அப்போது அவர் அறிந்திருக்கவில்லை. அப்போது ரிச்சர்ட் ஸ்டால்மேன், GNU திட்டத்தை அறிவித்திருந்தார். GCC, Emacs ஆகிய கருவிகளையும் அளித்திருந்தார். மனிதர் யாவரும் பயனுறும் வகையில், மூல நிரலையும் பகிர்ந்தார். மூல நிரலை யாவரும் எங்கும் பகிரலாம், தேவையான மாற்றங்களை செய்து கொள்ளலாம், மாற்றங்களையும் பகிரலாம் என்ற உரிமையில் அவர் தொடங்கிய மென்பொருட்கள், மாபெரும் அறிவுப்… Read More »

731 மின்னூல்கள் – 80 லட்சம் பதிவிறக்கங்களுடன், 8 ஆண்டுகளை நிறைவு செய்யும் FreeTamilEbooks.com திட்டம்

80 லட்சத்துக்கும் மேற்பட்ட பதிவிறக்கங்கள், 731 மின்னூல்கள், பல்லாயிரம் வாசகர்கள், நூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள், பல புது பங்களிப்பாளர்களுடன் சூலை 26 2021 அன்று FreeTamilEbooks.com திட்டம் 8 ஆண்டுகளை நிறைவு செய்து 9 ஆவது ஆண்டில் நுழைந்துள்ளது. மின்னூல் திட்டமாகத் தொடங்கி, கணியம் அறக்கட்டளையாக வளர்ந்து, மின் தமிழ் உலகில் பல்வேறு செயல்களை செய்யும் வகையில் வளர்ந்துள்ளது பெருமகிழ்ச்சி. பெருமளவு நேரத்தையும், உழைப்பையும், நன்கொடையையும் அள்ளித்தரும் அனைத்து பங்களிப்பாளர்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் பல்லாயிரம் நன்றிகள். உங்கள் கருத்துகளை… Read More »

காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்பு – 18-07-2021 – மாலை 4 மணி – இன்று – Emacs Editor – பயிற்சிப் பட்டறை

வணக்கம். காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்புக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை மாலையும் 4 மணி முதல் 5 மணி வரை இணைய வழியில் சந்தித்து, கட்டற்ற மென்பொருட்கள் பற்றி உரையாடுகிறோம். நிகழ்ச்சி நிரல் 1. பங்கு பெறுவோர் அறிமுகம் 2. Emacs Editor – பயிற்சிப் பட்டறை Emacs Editor என்பது 45 ஆண்டுகளாக பெரிதும் பயன்பட்டு வரும் ஒரு உரைத்திருத்தி ஆகும். ஈமேக்சின் பல நூறு பயன்பாடுகளில் உரைத் திருத்தம்… Read More »