Category Archives: videos

வாங்க தெரிஞ்சிக்கலாம் : மொசில்லா ஆதரவு கட்டுரைகளுக்கு பங்களிப்பது எப்படி? [காணொளி]

மொசில்லா திட்டங்களுக்குப் பங்களிப்பது குறித்து காணொளி இந்தச் சுட்டியில் உள்ளது. இந்தக் காணொளியில் மொசில்லா ஆதரவு(Support Mozilla) கட்டுரைகளுக்குப் பங்களிப்பது குறித்து இந்தக் காணொளியில் காணலாம். சுட்டிகள்: 1. support.mozilla.org/ta/ 2. mozillians.org/ 3. groups.google.com/forum/#!forum/mozilla.dev.l10n.ta/join 4. lists.mozilla.org/listinfo/dev-l10n-ta  

வாங்க தெரிஞ்சிக்கலாம் : மொசில்லா தமிழ் மொழியாக்கத்தில் பங்களிப்பது எப்படி? [காணொளி]

மொசில்லா என்ற திறந்த மூல மென்பொருள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும், உலாவிகளில் ஒன்று. கணினிக்கான உலாவியாக உருவெடுத்த ஒரு தொழில்நுட்பம் இன்று, இணைய உலகில் தனியுரிமையை பாதுகாக்கவும், இணையத்தை கட்டற்ற அமைப்பாக வைக்கவும், தன்னாலான போராட்டத்தைச் சில சமரசங்களோடு நடத்திவருகிறது. ஒரு பயனுருடைய தனிப்பட்ட தகவல்களை எடுத்துப் பணமாக்கவும், பயனர் வாழ் பகுதியின் அரசியலை தீர்மானிக்கவும் இணையம் பயன்படுத்தப்பட்டுவரும் இதே காலக்கட்டத்தில் தான், ஒரு அமைப்பு தனது பயனர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற தத்துவத்துடன்… Read More »

Mozilla Common Voice in Tamil – தமிழில் மொசில்லா பொதுக்குரல் திட்டம் அறிமுகம் – காணொளி

மொசில்லாவின் திறந்த மூல குரல்தரவுதள முன்னெடுப்பான Common Voice (voice.mozilla.org/ta) இப்போது தமிழில் தொடங்கப்பட்டுள்ளது. இது குரல் கண்டறிதல் தொழில்நுட்பங்களுக்கு பயிற்சி அளிப்பதற்குத் தேவையான பெருமளவு குரல்மாதிரிகளைக் பொதுக்கள உரிமையில் (CC-0) வெளியிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. Common Voice தளத்திற்குச் சென்று சொற்றொடர்களைப் பேசி பதிவுசெய்வதின் மூலம், மற்றும் பதிவுசெய்யப்பட்டவற்றைச் சரிபார்ப்பதின் மூலம் நீங்கள் பங்களிக்கலாம். படிப்பதற்குத் தேவையான சொற்றொடர் சேகரிப்பில் உதவ, உங்கள் சொற்றொடர்களை, இக்கருவியின் (common-voice.github.io/sentence-collector/) மூலம் சேர்க்கலாம். குறிப்பு: சொற்றொடர்கள் CC0 உரிமத்தில்… Read More »